செஸ் ஒலிம்பியாட்: 8 வயது சிறுமி ஜெயித்த ஆட்டம் இதுதான்!

தன்னை விட 12 வயது அதிகமுள்ள வீராங்கனையையும் தோற்கடித்து அனைவருடைய பாராட்டையும் பெற்றுள்ளார். 
செஸ் ஒலிம்பியாட்: 8 வயது சிறுமி ஜெயித்த ஆட்டம் இதுதான்!

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அனைவருடைய கவனத்தை ஈர்த்துள்ளார் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த 8 வயது சிறுமியும் வீராங்கனையுமான ராண்டா செடர்.

கடந்த சனிக்கிழமையன்று, கோமோரோஸ் நாட்டைச் சேர்ந்த 20 வயது ஃபஹிமாவுக்கு எதிராக விளையாடிய இந்தச் சுட்டி பெண், 39-வது நகர்த்தலில் அட்டகாசமான வெற்றியை அடைந்து அனைவரையும் மேலும் ஆச்சர்யப்படுத்தினார். ஞாயிறன்று செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் இடத்துக்கு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், ராண்டா செடரைப் பாராட்டி விட்டு சென்றார்.

ராண்டா செடர் விளையாடி ஜெயித்த ஆட்டம் இதுதான். இந்த வயதில் செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்றதுடன் தன்னை விட 12 வயது அதிகமுள்ள வீராங்கனையையும் தோற்கடித்து அனைவருடைய பாராட்டையும் பெற்றுள்ளார். 

ராண்டா செடர் வெற்றி பெற்றபோது...
ராண்டா செடர் வெற்றி பெற்றபோது...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com