செஸ் ஒலிம்பியாட்: ஹாங்காங் அணியில் இடம்பெற்றுள்ள தமிழ்க் குடும்பம்

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இருவர் ஹாங்காங் அணிக்காக சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடி வருகிறார்கள்.
செஸ் ஒலிம்பியாட்: ஹாங்காங் அணியில் இடம்பெற்றுள்ள தமிழ்க் குடும்பம்

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இருவர் ஹாங்காங் அணிக்காக சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடி வருகிறார்கள்.

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஹாங்காங் அணி சார்பாக விளையாடி வருபவர், சிகப்பி. அவரும் அவருடைய 13 வயது மகனான தண்ணீர்மலையும் ஹாங்காங் அணிக்காக விளையாடி வருகிறார்கள். சிகப்பியின் கணவர் பி.ஆர். கண்ணப்பன், ஹாங்காங் செஸ் சம்மேளனத்தின் பொருளாளராக உள்ளார்.

மதுரையில் பிறந்த சிகப்பி, சிறுவயதில் செஸ் கற்றுக்கொண்டு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

யு-16 சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக சாம்பியனாக நான் இருந்தேன். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சார்பில் அகில இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்றேன். எங்கள் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது என ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு சிகப்பி பேட்டியளித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு கணவர் கண்ணப்பனுடன் நைஜீரியாவுக்குச் சென்றுள்ளார். அங்கு 5 வருடங்கள் வாழ்ந்துவிட்டு, 17 வருடங்களுக்கு முன்பு ஹாங்காங்குக்கு குடிபெயர்ந்துள்ளார். 

2016 செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஹாங்காங் அணிக்காகப் போட்டியிட்டு 11 சுற்றுகளில் 8.5 புள்ளிகளைப் பெற்றார் சிகப்பி. தற்போது செஸ் பயிற்சியாளராகவும் உள்ளார். சென்னையில் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது என்று தெரிந்தவுடன் போட்டியில் பங்கேற்கத் தயாராகிவிட்டார்.

2022 செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த சென்னை தேர்வானபோது என்னுடைய சொந்த மண்ணில் விளையாட வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பெரிய அணிகள் விளையாடும் பகுதியில் நானும் விளையாடுவது பெருமையாக உள்ளது. சில ஹாங்காங்க் வீரர்களால் விளையாட முடியாத காரணத்தால் என்னுடைய மகன் தண்ணீர்மலையும் ஹாங்காங் அணியில் இடம்பெற்றுள்ளார். ஹாங்காங் தேசிய அளவிலான போட்டியில் 10-ம் இடம் வந்ததால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com