செஸ் ஒலிம்பியாட்: முதலிடத்தில் இந்தியா பி அணி!

மகளிர் பிரிவிலும் இந்திய அணிகள் தடுமாறின.
செஸ் ஒலிம்பியாட்: முதலிடத்தில் இந்தியா பி அணி!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.

முதல் மூன்று நாள்களில் சிறப்பாக விளையாடி வந்த இந்தியாவின் ஆறு அணிகளும் நேற்று தடுமாற்றம் கண்டன. ஓபன் பிரிவில் இந்திய சி அணி ஸ்பெயினிடம் 1.5-2.5 எனத் தோற்றது. இந்திய ஏ அணி பிரான்ஸிடம் 2-2 என டிரா செய்தது. இந்திய பி அணி மட்டும் இத்தாலியை 3-1 என வீழ்த்தியது.

மகளிர் பிரிவிலும் இந்திய அணிகள் தடுமாறின. ஜார்ஜியாவுக்கு எதிராக இந்திய சி அணி, 1-3 எனத் தோற்றது. ஹங்கேரி, ஈஸ்டோனியா அணிகளை இந்திய ஏ, இந்திய பி அணிகள் தலா 2.5-1.5 என வீழ்த்தின.

ஓபன் பிரிவில் இந்தியா பி அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தியா ஏ 7-ம் இடத்திலும் இந்தியா சி 20-ம் இடத்திலும் உள்ளன.

நான்கு சுற்றுகளுக்குப் பிறகு மகளிர் பிரிவில் இந்தியா ஏ, இந்தியா பி உள்பட எட்டு அணிகள் அனைத்து ஆட்டங்களையும் வென்றுள்ளன. புள்ளிகள் பட்டியலில் இந்தியா ஏ 4-ம் இடத்திலும் இந்தியா பி 6-ம் இடத்திலும் இந்தியா சி 28-ம் இடத்திலும் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com