தாமதமாகத் தொடங்கும் 3-வது டி20: காரணம் என்ன?

தாமதமாகத் தொடங்கும் 3-வது டி20: காரணம் என்ன?

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டமும் தாமதமாகத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டமும் தாமதமாகத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

2-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி 19.4 ஓவர்களில் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜடேஜா 27 ரன்கள் எடுத்தார். மே.இ. தீவுகள் அணியின் ஒபட் மெக்காய் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். மே.இ. தீவுகள் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிராண்டன் கிங் 68 ரன்கள் எடுத்தார்.

2-வது டி20 ஆட்டம் நேற்று தாமதமாகத் தொடங்கியது. அணி வீரர்களின் பயணப் பெட்டிகள், முதல் டி20 ஆட்டம் நடைபெற்ற டிரினிடாட்-டில் இருந்து பேஸ்டருக்கு வருவதற்குத் தாமதம் ஆனது. இதனால் 3 மணி நேரம் தாமதமாக, உள்ளூர் நேரம் மதியம் 1.30 மணிக்குத்தான் (இந்திய நேரம் இரவு 11 மணி) 2-வது டி20 ஆட்டம் தொடங்கியது. 

3-வது டி20 ஆட்டம் இன்று பேஸ்டரில் நடைபெறுகிறது. 2-வது டி20 ஆட்டம் தாமதமாகத் தொடங்கியதாலும் அடுத்த நாளே 3-வது டி20 ஆட்டம் நடைபெறுவதாலும் வீரர்கள் முழு ஓய்வு பெறுவதற்காக பிசிசிஐ ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 3-வது டி20 ஆட்டம் இந்திய நேரம் இரவு 9.30 மணிக்குத் (உள்ளூர் நேரம் மதியம் 12 மணி) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com