டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா

டி20 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 2,000 ரன்களைக் கடந்த நபர் என்ற சாதனையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா

டி20 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 2,000 ரன்களைக் கடந்த நபர் என்ற சாதனையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.

இந்திய ஆடவர் அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 2,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து இன்று மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை டி20 போட்டிகளில்  2000 ரன்களைக் கடந்த இரண்டாவது நபர் என்ற சாதனையப் படைத்துள்ளார்.

அவர் இந்த சாதனையை இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் படைத்துள்ளார். பார்படோஸ் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் 7 பந்துகளை எதிர்கொண்ட ஸ்மிருதி மந்தனா 5 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 5 ரன்களில் ஆட்டமிழந்த போதிலும்  அவர் புதிய  சாதனை படைத்துள்ளார். 

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 79 இன்னிங்ஸில் அவர் 2,004 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 27.45 ஆகும். அதில் 14 அரை சதங்கள் அடங்கும். அவர் அதிகபட்சமாக 86 ரன்கள் குவித்துள்ளார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 96 இன்னிங்ஸில் 2,973 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 33.03 ஆகும். அதில் 4 சதங்கள் மற்றும் 22 அரை சதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 118 ஆகும்.

பார்போடாஸ் அணிக்கு எதிராக விளையாடியப் போட்டியில் இந்திய மகளிர் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com