தொடரும் பணவீக்கம்: உயரும் வட்டி விகிதங்களால் பிரிட்டன் மக்கள் அவதி

பிரிட்டனில் பணவீக்கத்தின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தனிநபர் கடன்களின் வட்டி விகிதமும் உயர்ந்து வருகிறது.
தொடரும் பணவீக்கம்: உயரும் வட்டி விகிதங்களால் பிரிட்டன் மக்கள் அவதி

பிரிட்டனில் பணவீக்கத்தின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தனிநபர் கடன்களின் வட்டி விகிதமும் உயர்ந்து வருகிறது.

பிரிட்டனில் வாகன எரிவாயு மற்றும் உணவுப் பொருள்களின் விலையேற்றம் சில்லறைப் பணவீக்கத்தின் விகிதத்தை அதிகரிக்கச் செய்ததால் வங்கிகளில் பெற்ற கடன்களின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வருகின்றன.

அந்நாட்டில் நுகா்வோா் விலை குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறைப் பணவீக்கம் மே மாதத்தில் 9.1 சதவீதத்திலிருந்து ஜூன் மாதம் 9.4 சதவீதமாக உயர்ந்திருந்த நிலையில் ஜூலை மாதமும் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

இதனால், கடந்த நிதியாண்டு முடிவில் (ஏப்ரலில்) 1.25% ஆக இருந்த தனிநபர் வங்கிக்கடன்களின் மீதான வட்டி விகிதம்  தற்போது 0.5% அதிகரிக்கப்பட்டு 1.75% ஆக உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இதற்கிடையே, சில்லறைப் பணவீக்கம் கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத புதிய பணவீக்க உயர்வு என்றும் அக்டோபர் மாதத்தில் பணவீக்கம் 13.3 சதவீதமாக உயரும் என பாங்க் ஆஃப் இங்கிலாந்து எச்சரித்துள்ளது. 

மேலும், நிதி நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் செய்தி நிறுவனங்கள் இன்று ‘கருப்பு வியாழன்’ எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

பணவீக்கத்திற்கு என்ன காரணம்?

பிரிட்டனில் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ரஷியாவும் மறைமுகக் காரணமாக இருக்கிறது. உக்ரைன் மீது போர் தொடுத்ததால் அதனைக் கண்டித்த பிரிட்டன் ரஷியாவுக்கு சில பொருளாதார தடைகளையும்  விதித்தது.

அதனைத் தொடர்ந்து, எரிவாயு போன்ற முக்கிய எரிபொருள்களை பிரிட்டனுக்கு அனுப்புவதை ரஷியா நிறுத்தியது. இதனால், ஏற்பட்ட பற்றாக்குறையே அவற்றின் விலையேற்றத்துக்குக் காரணம் என்றும் மேலும், இதே நிலைதொடர்ந்தால் 2024 ஆம் ஆண்டிற்குள் இங்கிலாந்தில் 5-ல் ஒரு குடும்பத்தினர் சேமிப்பை இழப்பார்கள் என்றும்  பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com