காமன்வெல்த்: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் பஜ்ரங் புனியா
By DIN | Published On : 05th August 2022 10:39 PM | Last Updated : 06th August 2022 02:41 PM | அ+அ அ- |

பஜ்ரங் புனியா
காமன்வெல்த் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் கனடா நாட்டைச் சேர்ந்த லச்லான் மெக்னிலை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். அவர் 4-0 என்ற புள்ளிக் கணக்கில் லச்லானை வீழ்த்தினார்.
இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடப்பாண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 8வது நாளான இன்று இந்திய வீரர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டனர். அந்த வகையில் மல்யுத்தப் போட்டிகளும் இன்று நடைபெற்றன.
இதில், ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா கனடா நாட்டைச் சேர்ந்த லச்லான் மெக்னிலுடன் மோதினார். இதில் 4-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.
இதேபோன்று 57 கிலோ எடைப் பிரிவில் (ஃப்ரீ ஸ்டைல்) இறுதி போட்டியில் இந்தியாவின் அன்ஷு மாலிக், நைஜீரியாவின் ஓடுனயோ ஃபோலசடேவுடன் மோதினார். இந்த போட்டியில் அன்ஷு மாலிக் 4-6 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளி பதக்கத்தை வென்றார்.
மேலும், பெண்களுக்கான 62 கிலோ எடைப்பிரிவிலான மல்யுத்த போட்டியில், இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் தங்கப் பதக்கம் வென்றார்.
இதன் மூலம், இந்திய அணி 8 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.