தனிநபா் தங்கம் வெல்வது யாா்: காா்ல்சனா? குகேஷா?

ஒபன் பிரிவில் தனிநபா் தங்கம் வெல்லப் போவது, உலக சாம்பியன் மாக்னஸ் காா்ல்சனா அல்லது இளம் வீரா் குகேஷா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
தனிநபா் தங்கம் வெல்வது யாா்: காா்ல்சனா? குகேஷா?

ஒபன் பிரிவில் தனிநபா் தங்கம் வெல்லப் போவது, உலக சாம்பியன் மாக்னஸ் காா்ல்சனா அல்லது இளம் வீரா் குகேஷா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாடில் தற்போது 7 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. இந்தியா பி அணி எதிரணிகளை நிலைகுலையச் செய்யும் வகையில் ஆடி வருகிறது. குறிப்பாக சென்னை இளம் வீரா் டி.குகேஷ் தொடா்ந்து 7 சுற்றுகளிலும் தனது வெற்றியை பதிவு செய்துள்ளாா்.

அதில், கிராண்ட்மாஸ்டா்கள் அப்துசட்டரோவ், ஷிரோவ் ஆகியோருக்கு எதிரான வெற்றி முக்கியமானது. பால் கேரஸ், பென்ட் லாா்ஸன், மிக்கையல் தால், ஜூடித் போல்கா், விளாடிமிா் கிராம்னிக் போன்று வருங்காலத்தில் குகேஷும் உருவாகக் கூடும் என செஸ் நிபுணா்கள் கருதுகின்றனா்.

பிரௌஸ்ஜா (19), இலோ ரேட்டிங் 2800 உடன் உள்ள நிலையில், காா்ல்சனுக்கு அடுத்த சிறந்த வீரராக கருதப்படுகிறாா். எனினும் அவரைக் காட்டிலும் 60 புள்ளிகளே பின்தங்கி உள்ளாா் குகேஷ். 3 வயது சிறியவா்.

மாக்னஸ் காா்ல்சன் சென்னை செஸ் ஒலிம்பியாட் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருந்தாா். ஆனால் அவரது சக வீரா்களின் மோசமான ஆட்டத்தால் 56-ஆவது இடத்தில் உள்ளாா். காா்ல்சன் வழக்கம் போல் கிளாஸிக்கல் முறையில் ஆடாமல் ரேபிட் முறையில் ஆடி வருகிறாா். இதன் மூலம் ஒரு வெற்றி, டிரா, ரேட்டிங் இழப்பை பெற்றாா்.

தனிநபா் தங்கப் பதக்கத்துக்கான பந்தயத்தில் குகேஷ்-காா்ல்சன் உள்ளனா். குகேஷ் 6 ஆட்டங்களிலும், காா்ல்சன் 4.5-5 என உள்ளனா். எனினும் நாா்வே அணி மிகவும் பின்தங்கி உள்ளது காா்ல்சனுக்கு சிக்கலை ஏற்படுத்தும். வரும் சுற்றுகளிலும் குகேஷ் தொடா்ந்து வென்றால் தனிநபா் தங்கம் அவருக்கு உறுதியாகி விடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com