ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் அழியாமல் இருக்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
டி20 கிரிக்கெட் வருகையால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் அழிந்து வருகிறது. சமீபத்தில் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்கா டி20 லீக் 2023 ஜனவரியில் தொடங்க இருக்கிறது. யுஏஈ டி20 லீக் 2023 ஜனவரியில் தொடங்க இருக்கிறது. இதைக்குறித்து இந்தியாவின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியதாவது:
ஒருநாள் போட்டிகள் அழிந்து வருவதாக நினைக்கிறேன். ஐசிசிக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. இப்படியே போனால் 4 வருடத்திற்கு ஒருமுறை தான் விளையாட முடியும். அனைவரும் டி20 கிரிக்கெட் தொடரிலே பங்கேற்பதில் குறியாக உள்ளனர். ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் அழியாமல் இருக்க ஐசிசிதான் அதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். கிளப் கிரிக்கெட், ஐபிஎல், பிக் பேஷ் எல்லாம் சரி. தற்போது தென்னாப்பிரிக்க லீக், யுஏஈ லீக் வருகிறது. அனைத்து நாடுகளும் கிளப் கிரிக்கெட் விளையாடினால 4 வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வரும் உலக கோப்பையில் மட்டுமே விளையாட முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை உள்பட 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் இன்று கனமழை!

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly

முதல்வர் விஜய் பிறந்த நாள்! இன்றைய செய்திகள் ஜூன் 22 - நேரலை!

உடல் எடையைக் குறைக்கும் ஆளி விதைகள்! எவ்வளவு சாப்பிட வேண்டும்?
விடியோக்கள்

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly




