தினேஷ் கார்த்திக்கா, நானா? யார் அணியில் இடம்பெறுவர் என்ற கேள்விக்கு ரிஷப் பந்த் கூறிய பதில்!
By DIN | Published On : 15th August 2022 03:36 PM | Last Updated : 15th August 2022 03:42 PM | அ+அ அ- |

தினேஷ் கார்த்திக்கா தானா யார் அணியில் இடம்பெறுவர் என்ற கேள்விக்கு ரிஷப் பந்த் சுவாரசியமான பதிலளித்துள்ளார்.
ஆசிய கோப்பைக்கான இந்திய வீரர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் ஆகிய இருவரது பெயரும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இருவருமே விக்கெட் கீப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இருவரில் யார் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இருவரும் ஆகஸ்ட் 18இல் தொடங்கவிருக்கும் ஜிம்பாம்வே தொடரில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரிஷப் பந்த எந்த இடத்தில் விளையாடினாலும் நன்றாக விளையாடிக்கொண்டு வருகிறார். ஒரு இடது கை பேட்ஸ்மேனாக அவரது பங்கு இந்திய அணிக்கு தேவை, அதேபோல தினேஷ் கார்த்திக் ஆட்டத்தின் இறுதியில் அட்டகாசமாக விளையாடி வருகிறார். இதில் யாரை தேர்வு செய்வதென அணிக்கு நிச்சயம் குழப்பம் நிலவும். இதுக்குறித்து ரிஷப் பந்திடம் கேட்ட போது அவர் கூறியதாவது:
நாங்கள் இதைப் பற்றி நினைக்கவே இல்லை. நாங்கள் தனித்துவமானவர்கள். எங்களது 100 சதவிகிதம் உழைப்பினை அணிக்கு வழங்குவது மட்டுமே எங்களது வேலை. எங்களை எப்படி உபயோகிப்பது போன்ற மீதியெல்லாம் அணியின் கேப்டன், பயிற்சியாளர் ஆகியோரிடம் உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...