செஸ் போட்டி: 2-வது சுற்றிலும் பிரக்ஞானந்தா வெற்றி
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அடுத்ததாக அமெரிக்காவின் மியாமியில் நடைபெறும் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பைப் போட்டியில் விளையாடி வருகிறார் இந்தியாவின் பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தா.
முதல் சுற்றில் உலகின் நெ.1 ஜூனியர் வீரர் அலிரேஸா ஃபிரோஜாவை 2.5-1.5 என வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.
2-வது சுற்றில் பிரபல வீரர் அனிஷ் கிரியை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. முதல் ஆட்டத்தில் தோல்வி பெறும் நிலையில் இருந்து தப்பித்து டிரா செய்தார் பிரக்ஞானந்தா. அடுத்த இரு ஆட்டங்களும் டிரா ஆயின. கடைசி ஆட்டத்தில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா 2.5-1.5 என்கிற புள்ளிக்கணக்கில் அனிஷ் கிரியை 2-வது சுற்றில் வீழ்த்தினார்.
8 வீரர்கள் விளையாடும் இந்தப் போட்டியில் கார்ல்சனுடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளார் பிரக்ஞானந்தா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.