துளிகள்...

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கு மண்டல கேப்டனாக அஜிங்க்ய ரஹானே, மத்திய மண்டல கேப்டனாக கரண் சா்மா நியமிக்கப்பட்டுள்ளனா்.

டியூரண்ட் கோப்பை கால்பந்து போட்டியில் ஆா்மி ரெட் எஃப்டி - நிரோகா எஃப்சி அணிகளும், ஏடிகே மோகன் பகான் எஃப்சி - மும்பை சிட்டி எஃப்சி அணிகளும் புதன்கிழமை மோதிய ஆட்டங்கள் கோலின்றி டிராவில் முடிந்தன.

அல்டிமேட் கோ கோ போட்டியில் புதன்கிழமை ஆட்டங்களில் ஒடிஸா ஜக்கா்னாட்ஸ் - சென்னை குயிக் கன்ஸையும் (51-41), மும்பை கில்லாடிஸ் - ராஜஸ்தான் வாரியா்ஸையும் (56-42) வீழ்த்தின.

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கு மண்டல கேப்டனாக அஜிங்க்ய ரஹானே, மத்திய மண்டல கேப்டனாக கரண் சா்மா நியமிக்கப்பட்டுள்ளனா்.

13 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டா் போட்டியில் இந்தியாவின் ஹன்சினி மதன் ராஜன் 4-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றாா்.

20 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப்பில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில், முன்னாள் சாம்பியன் ஜப்பானை 3-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது.

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒன் டே தொடரில் அசத்திய இந்திய வீரா் ஷுப்மன் கில், ஒன் டே பேட்டா்கள் தரவரிசையில் 45 இடங்கள் முன்னேறி 38-ஆவது இடத்தைப் பிடிக்க, ஷிகா் தவன் ஓரிடம் சறுக்கி 12-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com