துபை ஓபன் செஸ் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் அர்ஜுன் எரிகைசி, இந்தியாவின் நெ.2 செஸ் வீரராக முன்னேறியுள்ளார்.
அபுதாபி மாஸ்டர்ஸ் செஸ் போட்டியை இந்தியாவின் 18 வயது அர்ஜூன் எரிகைசி சமீபத்தில் வென்றார். 9 சுற்றுகளின் முடிவில் 7.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் செஸ் தரவரிசையில் 2724 புள்ளிகளுடன் 24-ம் இடத்துக்கு முன்னேறினார் அர்ஜுன். இவருக்கு முன்பு விஸ்வநாதன் ஆனந்த் 2756 புள்ளிகளுடன் 12-ம் இடத்திலும் குகேஷ் 2728 புள்ளிகளுடன் 20-ம் இடத்திலும் இருந்தார்கள்.
அபுதாபி ஓபன் செஸ் போட்டிக்கு அடுத்ததாக துபை ஓபன் செஸ் போட்டியில் விளையாடி வரும் அர்ஜுன் எரிகைசி, முதல் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று பிரக்ஞானந்தா உள்பட 7 வீரர்களுடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார். இதையடுத்து தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.
தற்போதைய செஸ் தரவரிசையில் முதல் இடத்தில் கார்ல்சன் தொடர்ந்து நீடிக்கிறார். விஸ்வநாதன் ஆனந்த் 12-ம் இடத்தில் உள்ள நிலையில் குகேஷைப் பின்னுக்குத் தள்ளி 2728.7 புள்ளிகளுடன் 20-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் அர்ஜுன் எரிகைசி. 2725.7 புள்ளிகளுடன் குகேஷ் 24-ம் இடத்துக்கு இறங்கியுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் நெ.2 செஸ் வீரராக முன்னேறியுள்ளார் அர்ஜுன் எரிகைசி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூடர் கூடம் 2 படத்தின் முதல் பார்வை போஸ்டர்!

ரேஷன் கடைகளில் பாக்கெட்டுகளில் தரமான கோதுமை மாவு! பட்ஜெட்டில் தகவல்

பட்ஜெட் 2026! சூப்பர் எல் நினோ பாதிப்பை சமாளிக்க ரூ. 340 கோடி ஒதுக்கீடு!
தவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!
விடியோக்கள்

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் | CM Vijay | TVK | TN Budget 2026- 2027



