இந்திய தேசியக் கொடியை ஜெய் ஷா வாங்க மறுத்தது ஏன்?

ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய தேசியக் கொடியை ஜெய் ஷா வாங்காதது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
இந்திய தேசியக் கொடியை ஜெய் ஷா வாங்க மறுத்தது ஏன்?

ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய தேசியக் கொடியை ஜெய் ஷா வாங்காதது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

துபையில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 19.5 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சோ்த்தது. அடுத்து இந்தியா 19.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வென்றது.

இந்த ஆட்டத்தில் ஹாா்திக் பாண்டியா - பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டாா். 

இந்நிலையில் இந்த ஆட்டம் முடிந்த பிறகு மைதானத்தில் இருந்த பிசிசிஐ செயலாளர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷாவிடம் ஒருவர் இந்திய தேசியக் கொடியை வழங்க முயன்றார். ஆனால் தேசியக் கொடியை வாங்க ஜெய் ஷா மறுத்துவிட்டார். இதன் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டது. இந்திய தேசியக்கொடியை ஜெய் ஷா அவமதித்தாரா எனப் பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

இந்திய தேசியக் கொடியை ஜெய் ஷா வாங்க மறுத்த நிகழ்வு (34.22-லிருந்து)

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக உள்ள ஜெய் ஷா, அனைத்து அணிகளுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும் என்பதால் தான் இந்தியத் தேசியக் கொடியை வாங்க மறுத்துவிட்டார் என அறியப்படுகிறது. 

இந்தியா முழுவதும் நகரம் மட்டுமல்லாமல் கிராமங்கள் தோறும் நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இல்லங்களில் தேசியக் கொடியேற்றி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. , சுதந்திர தினத்தையொட்டி மத்திய அரசு சாா்பில் ‘வீடுதோறும் தேசியக் கொடி’ பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்றவும், ஒவ்வொருவரும் தேசியக் கொடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிரவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதன்படி பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தன்னுடைய வீட்டில் தேசியக்கொடியை ஏற்றி, குடும்பத்தினருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தார். மேலும் ட்விட்டரில் தன்னுடைய டிபியாக அவர் தேசியக் கொடியையே வைத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com