என்னிடம் பேச உங்களுக்குச் சம்மதமா?: ஜடேஜாவிடம் கேட்ட மஞ்ச்ரேக்கர்

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் ஜடேஜாவை மஞ்ச்ரேக்கர் பேட்டியெடுத்தார்.
என்னிடம் பேச உங்களுக்குச் சம்மதமா?: ஜடேஜாவிடம் கேட்ட மஞ்ச்ரேக்கர்

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் ஜடேஜாவை மஞ்ச்ரேக்கர் பேட்டியெடுத்தார். அப்போது ஜடேஜாவிடம் மஞ்ச்ரேக்கர் கேட்ட முதல் கேள்வி ஜடேஜாவை ஆச்சர்யப்படுத்தியது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

துபையில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 19.5 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சோ்த்தது. அடுத்து இந்தியா 19.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வென்றது.

இந்த ஆட்டத்தில் ஹாா்திக் பாண்டியா - பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டாா். ஹாா்திக் பாண்டியா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினாா். பந்துவீச்சில் 4 விக்கெட்டுகள் எடுத்த புவனேஸ்வா் குமாரும், பேட்டிங்கில் 35 ரன்கள் எடுத்த ரவீந்திர ஜடேஜாவும் அவருக்குத் துணையாக இருந்தனா். பாண்டியா ஆட்டநாயகன் ஆனாா்.

ஆட்டம் முடிந்த பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளராகப் பணியாற்றிய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஜடேஜாவைப் பேட்டியெடுத்தார். அப்போது முதல் கேள்வியே, என்னிடம் பேச உங்களுக்குச் சம்மதம் தானே என்று ஜடேஜாவிடம் கேட்டார் மஞ்ச்ரேக்கர். ஜடேஜாவும் சிரித்துக்கொண்டே, ஆமாம். பேசலாம் என்றார். இதன்பிறகு இந்திய அணி வெற்றி பெற்றது பற்றி பேசினார் ஜடேஜா. இதற்கு முன்பு ஜடேஜாவின் ஆல்ரவுண்டர் திறமைகள் குறித்து கேள்வியெழுப்பியிருந்தார் மஞ்ச்ரேக்கர். ஜடேஜாவும் இதற்குப் பதிலடி தந்தார். இதனால் இருவருக்கும் இடையில் ஒரு மோதல் நிலவி வந்த நிலையில் தற்போது இருவரும் சமாதானம் ஆகியிருப்பது இந்தப் பேட்டியின் மூலம் தெரியவந்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com