உலகக் கோப்பை நாக் அவுட் சுற்று: ஆசிய அணிகளை வீழ்த்திய பிரேஸில், குரோசியா (கோல்களின் விடியோ)

பெனால்டி ஷுட் அவுட் முறையில் ஜப்பானை வீழ்த்தியது குரோசியா.
வெற்றியைக் கொண்டாடும் பிரேஸில் அணி
வெற்றியைக் கொண்டாடும் பிரேஸில் அணி

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் பலம் வாய்ந்த அணிகளான பிரேஸிலும் குரோசியாவும் காலிறுதிக்குத் தகுதியடைந்துள்ளன.

திங்கள் அன்று நடைபெற்ற ஆட்டங்களில் குரோசியா ஜப்பானையும் பிரேஸில் தென் கொரியாவையும் வீழ்த்தின. கூடுதல் நேரத்துக்குப் பிறகும் 1-1 என சமநிலையில் இருந்ததால் பெனால்டி ஷுட் அவுட் முறையில் ஜப்பானை வீழ்த்தியது குரோசியா. பிரேஸில் அணி, தென் கொரியாவை 4-1 என நொறுக்கியது. உலகக் கோப்பையை 5 முறை வென்றுள்ள பிரேஸில் அணி, 1998-க்குப் பிறகு முதல்முறையாக நாக் அவுட் ஆட்டத்தில் 4 கோல்களை அடித்துள்ளது. 

இரு அணிகளும் டிசம்பர் 9 அன்று நடைபெறவுள்ள முதல் காலிறுதியில் மோதவுள்ளன. இரு அணிகளும் இதுவரை நான்கு முறை மோதியுள்ளன. இதில் பிரேஸில் 3 முறை வென்றுள்ளது. உலகக் கோப்பையில் மோதிய இருமுறையும் குரோசியாவை பிரேஸில் வீழ்த்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com