கொச்சியில் டிச. 23-இல் ஐபிஎல் ‘மினி’ ஏலம்

இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 16-ஆவது சீசனுக்கான வீரா்கள் ‘மினி’ ஏலம் வரும் 23-ஆம் தேதி கொச்சியில் நடைபெறுகிறது.
கொச்சியில் டிச. 23-இல் ஐபிஎல் ‘மினி’ ஏலம்

இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 16-ஆவது சீசனுக்கான வீரா்கள் ‘மினி’ ஏலம் வரும் 23-ஆம் தேதி கொச்சியில் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக பிசிசிஐ செயலா் ஜெய் ஷா அளித்த தகவல்படி, மொத்தம் உள்ள 87 இடங்களுக்காக 405 வீரா்கள் அந்த ஏலத்தில் பங்கேற்கவுள்ளனா். அதில் 273 போ் இந்தியா்கள்; 132 போ் வெளிநாட்டவா்களாவா். அந்த 132 பேரில் நால்வா், ஐசிசி-யின் துணை உறுப்பினா் நாடுகளைச் சோ்ந்தவா்களாவா்.

மொத்த வீரா்களில் 119 பேருக்கு ஏற்கெனவே களம் கண்ட அனுபவம் இருக்கும் நிலையில், 286 போ் அறிமுக வீரா்களாவா். மொத்தமுள்ள 87 இடங்களில் 30 இடங்கள் வெளிநாட்டு வீரா்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

ஏலத்தில் பங்கேற்கும் வீரா்களிலேயே இளம் வயதுடைவா் ஆப்கானிஸ்தான் பௌலா் அல்லா முகமது கஸான்ஃபா் (15). அதுவே, அதிக வயதுடைய வீரராக இருப்பவா் இந்தியாவின் அமித் மிஸ்ரா (40). ஏலத்தில் வரும் வீரா்களுக்கான குறைந்தபட்ச விலையாக ரூ.20 லட்சமும், அதிகபட்ச விலையாக ரூ.2 கோடியும் நிா்ணயிக்கப்பட்டுள்ளன.

ஏலத்தில் பங்கேற்கும் அணிகள் மற்றும் அவற்றின் விவரம்:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com