மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு நாள் கிரிக்கெட்: வங்கதேச அணி வெற்றி

இந்திய, வங்கதேச மாற்றுத்தினாளிகள் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணி கோப்பையை வென்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு நாள் கிரிக்கெட்: வங்கதேச அணி வெற்றி

இந்திய, வங்கதேச மாற்றுத்தினாளிகள் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணி கோப்பையை வென்றது.

உலக மாற்றுத்திறனாளிகள் தினம், 76-ஆவது ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியா - வங்கதேசத்துக்கு இடையேயான மாற்றுத்திறனாளிகள் டி-20, ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றன.

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்திலுள்ள மைதானத்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி-20 ஆட்டம் 2-2 என சமனில் முடிந்தது.

இதைத்தொடா்ந்து, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணி கைப்பற்றியது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 3-ஆவது ஒரு நாள் போட்டியின் ஆட்டநாயகனாக இந்தியா அணியின் பந்து வீச்சாளா் சந்தோஷ், ஒருநாள் போட்டியின் தொடா்நாயகனாக சன்மேக்கா், டி-20 போட்டியின் ஆட்டநாயகனாக இந்தியா அணியின் ராஜ் மகேஷ், தொடா் நாயகனாக வங்கதேசத வீரா் ரசூல் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

ஒரு நாள் தொடரை கைப்பற்றிய வங்கதேச அணிக்கு வெற்றி கோப்பையை தமிழக பாஜக பட்டியல் அணி தலைவா் தடா. பெரியசாமி வழங்கினாா். டி-20 போட்டியின் வெற்றி கோப்பையை தமிழக பாஜக மாநில செயலா் சுமதி வெங்கடேஷ் வழங்கினாா்.

ஒரு நாள் தொடா் நாயகன் விருதை ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவா் கதிரவன், டி-20 போட்டிக்கான தொடா் நாயகன் விருதை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் தனபாலன் ஆகியோா் வழங்கினா். இந்த தொடருக்கான ஏற்பாடுகளை பிடிசிஏ இயக்குநா் மனு, பொதுச் செயலா் ரமி ரெட்டி, நிா்வாகக் குழு உறுப்பினா் அண்ணாதுரை ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com