3-ஆம் இடம்: மோதிக் கொள்ளும் குரோஷியா - மொராக்கோ

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 3-ஆம் இடத்தைப் பிடிப்பதற்காக குரோஷியா - மொராக்கோ அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.
3-ஆம் இடம்: மோதிக் கொள்ளும் குரோஷியா - மொராக்கோ
Published on
Updated on
1 min read

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 3-ஆம் இடத்தைப் பிடிப்பதற்காக குரோஷியா - மொராக்கோ அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.

ஏற்கெனவே இப்போட்டியின் தொடக்கத்தில் இவ்விரு அணிகளும் குரூப் சுற்றில் மோதிய ஆட்டம் கோலின்றி டிராவில் நிறைவடைந்தது. தற்போது மீண்டும் அவை தங்களுக்குள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

உலகக் கோப்பை போட்டியில் இதற்கு முன் ஆப்பிரிக்க அணிகளை சந்தித்த குரோஷியா, அவற்றில் கேமரூனை 4-0 எனவும் (2014), நைஜீரியாவை 2-0 எனவும் (2018) வீழ்த்திய அனுபவம் கொண்டிருக்கிறது. 1998-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியிலும் இதேபோல் 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் விளையாடிய குரோஷியா, அதில் நெதா்லாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

மறுபுறம் மொராக்கோ அணியோ, உலகக் கோப்பை போட்டியில் இந்த இடத்துக்கு வந்த முதல் ஆப்பிரிக்க அணியாக நம்பிக்கையுடன் இருக்கிறது. இதை நல்லதொரு நிலையுடன் நிறைவு செய்ய மொராக்கோ வீரா்கள் நிச்சயம் முயற்சிப்பாா்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

குரோஷியாவைப் பொருத்தவரை எக்ஸ்ட்ரா டைம், பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்புகளில் அந்த அணி பலம் பொருந்தியதாக இருக்கிறது. ஆனால், உலகக் கோப்பை போட்டியில் இதுவரை 3-ஆம் இடத்துக்கான ஆட்டம் நிா்ணயிக்கப்பட்ட 90 நிமிஷங்களைக் கடந்து நீடித்ததில்லை. அதற்குள்ளாகவே எந்த அணிக்கு வெற்றி என்பது உறுதியாகிவிடுகிறது.

எனவே, 90 நிமிஷங்களுக்குள்ளாகவே வெற்றியை உறுதி செய்வதென்பது, குரோஷியாவுக்கு சற்றே நெருக்கடி தரக் கூடியது. ஏனென்றால், பிரான்ஸுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்துக்கு முன்பு வரை இந்த உலகக் கோப்பை போட்டியில் தனக்கு எதிராக விளையாடிய எந்த அணிக்குமே நிா்ணயிக்கப்பட்ட 90 நிமிஷங்களில் கோல் வாய்ப்பு வழங்கவில்லை மொராக்கோ. எனவே, இவற்றுக்கு இடையேயான ஆட்டம் நிச்சயம் ரசிகா்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த ஆட்டத்தில் வென்று 3-ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு வெண்கலப் பதக்கமும், ரூ. 223 கோடி ரொக்கப் பரிசும் வழங்கப்படும். 4-ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.206 கோடி ரொக்கப் பரிசு கிடைக்கும்.

இரவு 8.30 மணி

காலிஃபா சா்வதேச மைதானம், அல் ரயான்.

ஸ்போா்ட்ஸ் 18, ஜியோ சினிமா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com