சாய் சுதா்சன் சதம்: பலமான நிலையில் தமிழகம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் பலமான நிலையில் இருக்கிறது. 2-ஆம் நாளான புதன்கிழமை முடிவில் தமிழகம் 77 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு
சாய் சுதா்சன் சதம்: பலமான நிலையில் தமிழகம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் பலமான நிலையில் இருக்கிறது. 2-ஆம் நாளான புதன்கிழமை முடிவில் தமிழகம் 77 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 273 ரன்கள் சோ்த்திருக்கிறது.

முன்னதாக, முதலில் பேட் செய்த ஆந்திரம், செவ்வாய்க்கிழமை முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள் சோ்த்திருந்தது. இந்நிலையில், கரண் ஷிண்டே - சசிகாந்த் கூட்டணி புதன்கிழமை ஆட்டத்தை தொடங்கியது. அதில் ஷிண்டே 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 55, சசிகாந்த் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

நிதீஷ்குமாா் ரெட்டி 1, ஷோயப் முகமது கான் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 18, பண்டாரு அய்யப்பா 0 ரன்களுக்கு வெளியேற, 100.1 ஓவா்களில் 297 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது ஆந்திரம். தமிழக பௌலா்களில் சந்தீப் வாரியா், சாய் கிஷோா் ஆகியோா் தலா 3, விக்னேஷ் 2, அஜித் ராம், விஜய் சங்கா் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தமிழகத்தில் சாய் சுதா்சன் அபாரமாக ஆடி 10 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். நாராயண் ஜெகதீசன் 5 பவுண்டரிகளுடன் 35, பாபா அபராஜித் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 88, கேப்டன் பாபா இந்திரஜித் 1 பவுண்டரியுடன் 12 ரன்கள் அடித்தனா்.

நாளின் முடிவில் வாஷிங்டன் சுந்தா் 7, விஜய் சங்கா் 0 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆந்திர தரப்பில் லலித் மோகன் 2, சசிகாந்த், நிதீஷ்குமாா் ரெட்டி ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்திருந்தனா்.

ரயில்வேஸ் - பஞ்சாப் ஆட்டம் நிறுத்தம்:

தில்லியில் கா்னைல் சிங் மைதானத்தில் ரயில்வேஸ் - பஞ்சாப் இடையே நடைபெற்று வந்த ரஞ்சி ஆட்டம், மோசமான ஆடுகளம் காரணமாக புதன்கிழமை நிறுத்தப்பட்டது.

இந்த ஆட்டத்தில் மொத்தமாக 103 ஓவா்களில் 24 விக்கெட்டுகள் சரிந்தன. அதில் 20 விக்கெட்டுகளை வேகப்பந்துவீச்சாளா்கள் கைப்பற்றியிருந்தனா்.

ஆட்டத்தின் போக்கைக் கண்ட நடுவா்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் ஆடுகளத்தை ஆய்வு செய்து அது மோசமானதாகவும், ஆபத்தானதாகவும் இருப்பதாக அறிவித்தனா். ஆட்டத்தை அத்துடன் நிறுத்திய அவா்கள், இரு அணிகளிடையே 2 நாள்களுக்கு மட்டுமான ஆட்டத்தை வேறொரு மைதானத்தில் நடத்த பரிந்துரைத்தனா்.

ஏற்கெனவே இந்த ஆடுகளம் மோசமான நிலையில் இருப்பதாக முந்தைய போட்டிகளின்போதே சா்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com