ஐபிஎல் ஏலம் நேரலை: ஐபிஎல்-ல் முதல் முறையாக ஜோ ரூட், அயர்லாந்து வீரர்!

ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்களின் ஏலம் கொச்சியில் இன்று நடைபெற்று வருகிறது.
ஐபிஎல் ஏலம் நேரலை: ஐபிஎல்-ல் முதல் முறையாக ஜோ ரூட், அயர்லாந்து வீரர்!

ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்களின் ஏலம் கொச்சியில் இன்று நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் போட்டியில் பங்கேற்க 991 வீரர்கள் பதிவு செய்தார்கள். அவர்களில் அணிகளின் விருப்பத்துக்கேற்ப 405 வீரர்கள் ஏலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் 273 இந்திய வீரர்கள், 132 வெளிநாட்டு வீரர்கள். இவர்களில் 119 வீரர்கள் சர்வதேச ஆட்டங்களில் விளையாடியவர்கள். இந்த 405 வீரர்களில் இருந்து அதிகபட்சமாக 30 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 87 வீரர்கள் ஏலம் வழியாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.  

ஐபிஎல் 2022 போட்டியில் 14 தமிழக வீரர்கள் விளையாடினார்கள். இம்முறை ஏலத்தில் 16 தமிழக வீரர்கள் பங்கேற்கிறார்கள்.ஐபிஎல் 2022 போட்டியில் 14 தமிழக வீரர்கள் விளையாடினார்கள். இம்முறை ஏலத்தில் 16 தமிழக வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்த ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரணை ரூ. 18.50 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப். இதன்மூலம் ஐபிஎல் ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வான வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார்.

அதேபோல ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக அயர்லாந்து வீரர் ஜோஷ் லிட்டில் ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளார். அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியினால் 4.4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதல் முறையாக ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

 வரிசை எண் வீரர் பெயர் தொகை
1. ரஹானே ரூ. 50 லட்சம் 
2. ஸ்டோக்ஸ் ரூ. 16.25 கோடி 
3. ஷீக் ரஷீத் ரூ. 20 லட்சம்
4. நிஷாந்த் சிந்து  ரூ. 60 லட்சம்
5. கைல் ஜேமிசன்  ரூ. 1 கோடி
6.அஜய் மண்டல் ரூ. 20 லட்சம்
7.பகத் வர்மா ரூ. 20 லட்சம்

மும்பை இந்தியன்ஸ்

 வரிசை எண் வீரர் பெயர் தொகை
1. கேம்ரூன் கிரீன்  ரூ. 17.50 கோடி 
2. ஜை ரிச்சர்ட்சன்  ரூ. 1.50 கோடி
3.பியூஷ் சாவ்லா ரூ. 50 லட்சம்
4.டுவன் ஜேன்சன்  ரூ. 20 லட்சம்
5.விஷ்ணு வினோத்  ரூ. 20 லட்சம்
6.ஷாம்ஸ் முலானி ரூ. 20 லட்சம்
7.நேகல் வதேரா ரூ. 20 லட்சம்
8.ராகவ் கோயல் ரூ. 20 லட்சம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

 வரிசை எண் வீரர் பெயர் தொகை
1. டாப்லி ரூ. 1.90 கோடி 
2. ஹிமான்ஸு சர்மா  ரூ. 20 லட்சம்
3.வில் ஜேக்ஸ் ரூ. 3.20 கோடி
4.மனோஜ் பந்தாக்  ரூ. 20 லட்சம்
5.ராஜன் குமார்  ரூ. 70 லட்சம்
6.அவினாஷ் சிங்  ரூ. 60 லட்சம்
7.ஆர்.சோனு  ரூ. 20 லட்சம்

குஜராத் டைட்டன்ஸ்

 வரிசை எண் வீரர் பெயர் தொகை
1. கேன் வில்லியம்சன்  ரூ. 2 கோடி 
2. ஓடியன் ஸ்மித் ரூ. 50 லட்சம் 
3. கே.எஸ். பரத் ரூ. 1.20 கோடி 
4. ஷிவம் மவி ரூ. 6 கோடி
5. உர்வில் படேல் ரூ. 20 லட்சம்
6.ஜோஸ் லிட்டில் ரூ. 4.4 கோடி
7.மோஹித் சர்மா ரூ. 50 லட்சம்

தில்லி கேபிடல்ஸ்

 வரிசை எண் வீரர் பெயர் தொகை
1. பில் சால்ட் ரூ. 2 கோடி 
2. இஷாந்த் சர்மா  ரூ. 50 லட்சம் 
3. முகேஷ் குமார் ரூ. 5.50 கோடி 
4.மணீஷ் பாண்டே ரூ. 2.40 கோடி
5.ரீலே ரோசவ் ரூ.  4.6 கோடி

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

 வரிசை எண் வீரர் பெயர் தொகை
1. ஜெகதீசன் ரூ. 90 லட்சம்
2. வைபவ் அரோரா  ரூ. 60 லட்சம் 
3.சூயஸ் ஷர்மா ரூ. 20 லட்சம்
4.டேவிட் விசே  ரூ. 1 கோடி
5.குல்வந்த் கெஜ்ரோலியா ரூ. 20 லட்சம்
6.லிட்டன் தாஸ் ரூ. 50 லட்சம்
7.மந்தீப் சிங்  ரூ. 50 லட்சம்
8.ஷகீப் அல் ஹசன் ரூ. 1.5 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ்

 வரிசை எண் வீரர் பெயர் தொகை
1. ஹோல்டர் ரூ. 5.75 கோடி 
2. டோனோவன் பெரைரா  ரூ.50 லட்சம்
3.ஆடம் ஸாம்பா  ரூ. 1.5 கோடி
4.கே.எம்.ஆசிப்  ரூ. 30 லட்சம்
5.முருகன் அஸ்வின் ரூ. 20 லட்சம்
6.ஆகாஷ் வஷிஸ்ட் ரூ. 20 லட்சம்
7.அப்துல் பாசித்  ரூ. 20 லட்சம்
8.ஜோ ரூட் ரூ. 1 கோடி

லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸ்

 வரிசை எண் வீரர் பெயர் தொகை
1. நிகோலஸ் பூரன்  ரூ. 16 கோடி 
2. உனாட்கட் ரூ. 50 லட்சம் 
3. யாஷ் தாக்குர் ரூ. 45 லட்சம்
4.ரொமாரியோ ஷெப்பர்டு  ரூ. 50 லட்சம்
5.டேனியல் சாம்ஸ்  ரூ. 75 லட்சம்
6.அமித் மிஸ்ரா ரூ.50 லட்சம்
7.பிரேரக் மன்கத் ரூ. 20 லட்சம்
8.நவீன் உல் ஹக் ரூ. 50 லட்சம்
9.யுத்வீர் சாரக் ரூ. 20 லட்சம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

 வரிசை எண் வீரர் பெயர் தொகை
1. ஹாரி புரூக் ரூ. 13.25 கோடி 
2. மயங்க் அகர்வால்  ரூ. 8.25 கோடி
3. கிளாசென் ரூ. 5.25 கோடி
4. அடில் ரஷித் ரூ. 2 கோடி
5. மயங்க் மார்கண்டே  ரூ. 50 லட்சம்
6. விவ்ராந்த் சர்மா ரூ.2.60 கோடி
7. சமர்த் வியாஸ் ரூ. 20 லட்சம்
8.  சன்விர் சிங் ரூ. 20 லட்சம்
9. உபேந்திர யாதவ் ரூ. 25 லட்சம்
10.மயங்க் டாகர் ரூ. 1.8 கோடி
11.நிதிஷ் குமார் ரெட்டி ரூ. 20 லட்சம்
12. அன்மோல்பிரீத் சிங்  ரூ. 20 லட்சம்
13.அகீல் ஹூசைன் ரூ. 1 கோடி

பஞ்சாப் கிங்ஸ்

 வரிசை எண் வீரர் பெயர் தொகை
1. சாம் கரண் ரூ. 18.50 கோடி 
2. சிக்கந்தர் ராஸா  ரூ. 50 லட்சம்
3. ஹர்பிரீத் பாட்டியா  ரூ. 40 லட்சம்
4.வி.கவேரப்பா  ரூ. 20 லட்சம்
5.மோஹித் ரதி ரூ. 20 லட்சம்
6.சிவம் சிங் ரூ. 20 லட்சம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com