ஆர்எஸ்எஸ் அமைப்பைப் புகழ்ந்த மனைவி: ஜடேஜா பெருமிதம்!

இந்தியக் கலாசாரத்தையும் நம் சமூகத்தின் விழுமியங்களையும் நிலைநிறுத்தும் அமைப்பு...
ஆர்எஸ்எஸ் அமைப்பைப் புகழ்ந்த மனைவி: ஜடேஜா பெருமிதம்!

ஆர்எஸ்எஸ் அமைப்பைப் புகழ்ந்து பேசிய மனைவிக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் ஜடேஜா. 

குஜராத் தோ்தலில் இந்திய கிரிக்கெட் வீரா் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியும் பாஜக வேட்பாளருமான ரிவாபா ஜடேஜா ஜாம்நகா் வடக்கு தொகுதியில் வெற்றி பெற்றாா். இது அவா் போட்டியிட்ட முதல் தோ்தல். 53,301 வாக்குகள் வித்தியாசத்தில் ரிவாபா அமோக வெற்றி பெற்றாா்.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பைப் புகழ்ந்து பேசியுள்ளார் ரிவாபா. இதன் காணொளியை ட்விட்டரில் பகிர்ந்து ஜடேஜா கூறியதாவது:

ஆர்எஸ்எஸ் குறித்த உங்கள் அறிவு மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியக் கலாசாரத்தையும் நம் சமூகத்தின் விழுமியங்களையும் நிலைநிறுத்தும் அமைப்பு அது. உங்களுடைய அறிவும் கடின உழைப்பும் மற்றவர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது. இதையே தொடருங்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com