ஐபிஎல் ஏலத்தில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுனைத் தேர்வு செய்ய இரு அணிகள் ஆர்வம் காண்பித்த நிலையில் இறுதியில் மும்பை அணிக்கு அவர் மீண்டும் தேர்வாகியுள்ளார்.
22 வயது இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கர், 2020-ம் வருடம் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கான மும்பை அணியில் இடம்பெற்றார். அர்ஜுன் விளையாடிய இரு ஆட்டங்களிலும் மும்பை அணிக்குத் தோல்வியே கிடைத்தன. ஹரியாணாவுக்கு எதிராக 1/34, புதுச்சேரிக்கு எதிராக 1/33 என சுமாராகவே பந்துவீசினார். இதன்பிறகு 2021 ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, அர்ஜுனை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியில் ஈடுபட்டபோது அவருக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஓர் ஆட்டத்திலும் விளையாட முடியாமல் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினார். இந்திய அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராகப் பணியாற்றியுள்ள அர்ஜுன், இந்திய யு-19 அணிக்காகவும் விளையாடியுள்ளார்.
இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டிக்கான மும்பை அணி இளம் வீரர் பிருத்வி ஷா தலைமையில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பெற்றார்.
இந்நிலையில் நேற்றுடன் நிறைவடைந்த ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் தேர்வாகியுள்ளார் அர்ஜுன் டெண்டுல்கர். அவருடைய அடிப்படை விலை ரூ. 20 லட்சம் என்கிற நிலையில் ஏலத்தில் அர்ஜுனைத் தேர்வு மும்பை முதலில் ஆர்வம் காண்பித்தது. பிறகு குஜராத் அணி ரூ. 25 லட்சத்துக்கு அவரைத் தேர்வு செய்யப் பார்த்தது. ஆனால் ஏலத்தொகையை ரூ. 30 லட்சமாக உயர்த்தி அர்ஜுனை மீண்டும் தேர்வு செய்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும்! - பிரதமருக்கு பஞ்சாப் காங்கிரஸ் வலியுறுத்தல்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


