மகளிர் ஒருநாள்: ரன்களைக் குவிக்கும் மந்தனா & மிதாலி ராஜ்

கடந்த 12 ஒருநாள் ஆட்டங்களில் 8 அரை சதங்களை எடுத்து அசத்தியுள்ளார் மிதாலி ராஜ்.
மகளிர் ஒருநாள்: ரன்களைக் குவிக்கும் மந்தனா & மிதாலி ராஜ்

இந்திய மகளிர் கிரிக்கெட்டில் கேப்டன் மிதாலி ராஜும் தொடக்க வீராங்கனை மந்தனாவும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 

5-வது ஒருநாள் ஆட்டம் குயின்ஸ்டவுனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணி சிறப்பாகப் பந்துவீசியதால் நியூசிலாந்து அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 251 ரன்களே எடுக்க முடிந்தது. இந்திய அணி இலக்கை நன்கு விரட்டி 46 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்து ஆறுதல் வெற்றியை அடைந்தது. ஸ்மிருதி மந்தனா 71, ஹர்மன்ப்ரீத் கெளர் 63, கேப்டன் மிதாலி ராஜ் ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார்கள்.

ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாகத் தனது 50-வது அரை சதத்தை இன்று பூர்த்தி செய்தார் மிதாலி ராஜ். இதன்மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 50+ ரன்களை 50 முறை எடுத்த முதல் கேப்டன் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். 

அது மட்டுமல்லாமல் கடந்த 12 ஒருநாள் ஆட்டங்களில் 8 அரை சதங்களை எடுத்து அசத்தியுள்ளார் மிதாலி ராஜ். 39 வயதிலும் இந்திய ஒருநாள் அணியின் மிகப்பெரிய பலமாக உள்ளார்.

கடைசி 12 ஒருநாள் ஆட்டங்களில் மிதாலி ராஜ்

57*(66)
30(28)
23(33)
66*(81)
59(73)
16(28)
8(23)
63(107)
75*(86)
59(92)
72(108)
79(104)

இந்திய அணியில் உள்ள மற்றொரு நட்சத்திரமான மந்தனா, இலக்கை விரட்டுவது என்றால் விராட் கோலியாக மாறிவிடுகிறார். இலக்கை விரட்டியபோது கடந்த 12 ஒருநாள் ஆட்டங்களில் அவர் எடுத்த ரன்களைப் பாருங்கள். என்ன ஒரு மகத்தான வீராங்கனை!

மந்தனா கடந்த 14 இன்னிங்ஸில் இலக்கை விரட்டியபோது...

71 ரன்கள்
13
22
49
80*
74
63
90*
105
73*
53*
86
52
67
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com