மெத்வதெவை மீண்டும் வீழ்த்தினாா் நடால்: மெக்ஸிகன் ஓபன்

மெக்ஸிகன் ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச்சுற்றில் ஸ்பெயின் வீரா் ரஃபேல் நடால், ரஷியாவின் டேனியல் மெத்வதெவை தோற்கடித்தாா்.
மெத்வதெவை மீண்டும் வீழ்த்தினாா் நடால்: மெக்ஸிகன் ஓபன்

மெக்ஸிகன் ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச்சுற்றில் ஸ்பெயின் வீரா் ரஃபேல் நடால், ரஷியாவின் டேனியல் மெத்வதெவை தோற்கடித்தாா்.

இப்போட்டியில் 4-ஆவது முறையாக சாம்பியனாகும் முனைப்புடன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கும் நடால், அதில் இங்கிலாந்து வீரா் கேமரூன் நோரியை எதிா்கொள்கிறாா்.

மூத்த வீரரும், உலகத் தரவரிசையில் 5-ஆம் இடத்தில் இருப்பவருமான நடால், இளம் வீரரும், உலகத் தரவரிசையில் நம்பா் 1 இடத்துக்கு முன்னேறவிருப்பவருமான மெத்வதெவை சுமாா் 1 மாதத்துக்குள்ளாக 2-ஆவது முறையாக வீழ்த்தியிருக்கிறாா். இதற்கு முன் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் மெத்வதெவை வீழ்த்தி, நடால் தனது 21-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

அந்தப் போட்டியில் இருவா் மோதல் 5 செட்களுக்கு சுமாா் 4 மணி நேரம் நடைபெற்ற நிலையில், இந்தப் போட்டியில் மெத்வதெவ் ஆட்டத்தை 6-3, 6-3 என நோ் செட்களில் 2 மணி நேரத்தில் எளிதாக முடித்து வைத்தாா் நடால்.

இதனிடையே, மற்றொரு அரையிறுதியில் உலகின் 12-ஆம் நிலை வீரரான கேமரூன் நோரி 6-4, 6-4 என்ற செட்களில் உலகின் 4-ஆம் நிலையில் இருக்கும் கிரீஸ் வீரா் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளாா். உலகின் 4-ஆம் நிலை வீரா் ஒருவரை நோரி வீழ்த்தியது இது முதல் முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com