2-வது டெஸ்ட் 2-ம் நாள்: தென் ஆப்பிரிக்கா அபாரம், நியூசிலாந்து திணறல்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் இன்னும் 207 ரன்கள் பின்தங்கியுள்ளது.
2-வது டெஸ்ட் 2-ம் நாள்: தென் ஆப்பிரிக்கா அபாரம், நியூசிலாந்து திணறல்


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் இன்னும் 207 ரன்கள் பின்தங்கியுள்ளது.

நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்திருந்தது. வாண்டெர் டூசன் 13 ரன்களுடனும், தெம்பா பவுமா 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இரண்டாம் நாளில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் பெரிதளவில் சோபிக்கவில்லை. எனினும், மார்கோ யான்சென், கேசவ் மகாராஜ் இணை 9-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தது.

மகாராஜ் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். யான்சென் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 37 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம், தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

நியூசிலாந்து தரப்பில் நீல் வேக்னர் 4 விக்கெட்டுகளையும், மேட் ஹென்ரி 3 விக்கெட்டுகளையும், கைல் ஜேமிசன் 2 விக்கெட்டுகளையும், டிம் சௌதி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்துக்கு தொடக்கம் மோசமாக அமைந்தது. கேப்டன் டாம் லாதம் ரன் ஏதும் எடுக்காமலும், வில் யங் 4 ரன்களுக்கும் ககிசோ ரபாடா வேகத்தில் வீழ்ந்தனர். இதன்பிறகு, ஹென்ரி நிகோல்ஸ் ஓரளவு ரன்கள் சேர்த்தார். இறுதியில் காலின் டி கிராண்ட்ஹோம் துரிதமாக விளையாடி அரைசதம் அடித்து நியூசிலாந்துக்கு ஆறுதல் அளித்தார். டேரில் மிட்செல் அவருக்கு ஒத்துழைப்பு தந்து விளையாடினார்.

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் இன்னும் 207 ரன்கள் பின்தங்கியுள்ளது.

டி கிராண்ட்ஹோம் 54 ரன்களுடனும், மிட்செல் 29 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளையும், யான்சென் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com