இலங்கை தொடர்: காயம் காரணமாக ருதுராஜ் விலகல்
By DIN | Published On : 26th February 2022 01:17 PM | Last Updated : 26th February 2022 01:17 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
இலங்கையுடனான மீதமுள்ள 2 டி20 ஆட்டங்களிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகியுள்ளார்.
இந்தியா, இலங்கை இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பு இருந்தும் பயிற்சியின்போது மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகினார் ருதுராஜ் கெய்க்வாட்.
முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டி20 ஆட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
இதையும் படிக்க | டி20: தொடரைக் கைப்பற்றும் தீவிரத்தில் இந்தியா
இந்த நிலையில், மீதமுள்ள ஆட்டங்களிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அவருக்குப் பதில் மாற்று வீரராக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். தொடரிலிருந்து விலகியுள்ள ருதுராஜ் பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு விரைகிறார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்கெனவே இடம்பிடித்துள்ள மயங்க் அகர்வால், தரம்சலாவிலுள்ள இந்திய அணியுடன் இணைந்துவிட்டார்.
இந்திய அணியிலிருந்து சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் சஹார் ஆகியோர் ஏற்கெனவே இலங்கை டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி:
- ரோஹித் சர்மா (கேப்டன்)
- ஷ்ரேயஸ் ஐயர்
- சஞ்சு சாம்சன்
- இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்)
- வெங்கடேஷ் ஐயர்
- தீபக் ஹூடா
- ரவீந்திர ஜடேஜா
- யுஸ்வேந்திர சஹால்
- ரவி பிஷ்னாய்
- குல்தீப் யாதவ்
- முகமது சிராஜ்
- புவனேஷ்வர் குமார்
- ஹர்ஷல் படேல்
- ஜாஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்)
- ஆவேஷ் கான்
- மயங்க் அகர்வால்