அமெரிக்கா - ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார் - பாகிஸ்தான்
அமெரிக்கா - ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்தது குறித்து...

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் - ENS
அமெரிக்கா - ஈரான் இடையேயான மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் தயாராகவும் பெருமையுடனும் உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) தெரிவித்துள்ளார்.
ஈரான், இஸ்ரேல் - அமெரிக்கா இடையே பிப். 28 ஆம் தேதி தொடங்கி கடந்த மூன்று வாரங்களாக போர் நடைபெற்று வருகின்றது. இதனால் எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற சிரமங்களை மக்கள் எதிர்கொள்கின்றனர். பல்வேறு நாடுகள் இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்து வருகின்றன.
இந்த நிலையில், மேற்கு ஆசியாவில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் மறைமுக முயற்சிகள் குறித்து ஊடகத்தில் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து, பாகிஸ்தான் பிரதமர் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“மாகாணத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்காக மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை பாகிஸ்தான் வரவேற்பதோடு, முழுமையாக ஆதரிக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.
Pakistan welcomes and fully supports ongoing efforts to pursue dialogue to end the WAR in Middle East, in the interest of peace and stability in region and beyond. Subject to concurrence by the US and Iran, Pakistan stands ready and honoured to be the host to facilitateâ¦
— Shehbaz Sharif (@CMShehbaz) March 24, 2026
Summary
Pakistan is ready and proud to mediate between the United States and Iran, Prime Minister Shahbaz Sharif said on Tuesday (March 24).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






