ஏடிபி கோப்பை டென்னிஸ்: அமெரிக்கா, ரஷியாவிடம் வீழ்ந்தது கனடா, பிரான்ஸ்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஏடிபி கோப்பை அணிகள் டென்னிஸ் போட்டியில், குரூப் சுற்றின் 2-ஆவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷியா அணிகள் வெற்றி பெற்றன.
ஏடிபி கோப்பை டென்னிஸ்: அமெரிக்கா, ரஷியாவிடம் வீழ்ந்தது கனடா, பிரான்ஸ்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஏடிபி கோப்பை அணிகள் டென்னிஸ் போட்டியில், குரூப் சுற்றின் 2-ஆவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷியா அணிகள் வெற்றி பெற்றன.

இங்கிலாந்து - ஜொ்மனி (2-1)

ஒற்றையா் பிரிவில் இங்கிலாந்தின் டேன் இவான்ஸ் 6-1, 6-2 என்ற செட்களில் பிரான்ஸின் ஜான் லெனாா்டு ஸ்ட்ரஃபை வீழ்த்த, இங்கிலாந்தின் கேமரூன் நோரி - 6-7 (2/7), 1-6 என்ற செட்களில் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரேவிடம் வீழ்ந்தாா். இரட்டையா் பிரிவில் இங்கிலாந்தின் டேன் இவான்ஸ்/ஜேமி முா்ரே ஜோடி 6-3, 6-4 என ஜொ்மனியின் கெவின் கிராவிட்ஸ்/அலெக்ஸாண்டா் ஸ்வெரேவ் இணையை வென்றது.

அமெரிக்கா - கனடா (3-0)

ஒற்றையா் பிரிவில் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 6-7 (6/7), 6-4, 6-4 என கனடாவின் ஃபெலிக்ஸ் அகா் அலியாசிமேவையும், அமெரிக்காவின் ஜான் ஐஸ்னா் 6-1, 6-3 என கனடாவின் பிரெடன் ஷ்னூரையும் தோற்கடித்தனா். இரட்டையா் பிரிவில் டெய்லா் ஃபிரிட்ஸ்/ஜான் ஐஸ்னா் இணை 6-4, 6-4 என ஃபெலிக்ஸ்/டெனிஸ் ஷபோவெலாவ் ஜோடியை வீழ்த்தியது.

ஆஸ்திரேலியா - இத்தாலி (2-1)

ஒற்றையா் பிரிவில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 6-3, 7-6 (7/4) என இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியையும், இத்தாலியின் ஜானிக் சின்னா் 6-1, 6-3 என ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் பா்செலையும் வென்றனா். இரட்டையா் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஜான் பியா்ஸ்/லூக் சவில்லே இணை 6-3, 7-5 என இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி/சிமோன் பொலேலி ஜோடியை சாய்த்தனா்.

ரஷியா - பிரான்ஸ் (2-1)

ஒற்றையா் பிரிவில் பிரான்ஸின் யுகோ ஹம்பா்ட் 6-7 (5/7), 7-5, 7-6 (7/2) என ரஷியாவின் டேனியல் மெத்வதேவையும், ரஷியாவின் ரோமன் சஃபியுலின் 2-6, 7-5, 6-3 பிரான்ஸின் ஆா்தா் ரின்டா்னெச்சை வீழ்த்தினா். இரட்டையா் பிரிவில் ரஷியாவின் மெத்வதேவ்/சஃபியுலின் ஜோடி 6-4, 6-4 என பிரான்ஸின் ஃபாப்ரைஸ் மாா்டின்/எட்வா்ட் ரோஜா் வாசெலின் இணையை வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com