சிட்னியில் ஆறுதல் வெற்றியை அடையுமா இங்கிலாந்து?

56 டெஸ்டுகளில் 22-ல் இங்கிலாந்து வெற்றி பெற்றிருப்பதால்...
சிட்னியில் ஆறுதல் வெற்றியை அடையுமா இங்கிலாந்து?

12 நாள்களில் ஆஷஸ் கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டை வென்று 3-0 என்கிற முன்னிலையுடன் ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி. 

2019-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. 2017-18 ஆஷஸ் தொடரை வென்று 2019 தொடரை சமன் செய்ததால் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலிய அணி வசம் இருந்தது. இப்போது தொடரை வென்று கோப்பையை ஆஸ்திரேலியா தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இதுவரை நடைபெற்ற 72 ஆஷஸ் தொடர்களில் 34-ல் ஆஸ்திரேலியாவும் 32-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன.

4-வது டெஸ்ட் சிட்னியில் நாளை நடைபெறுகிறது. இந்த டெஸ்டில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவின் இதர மைதானங்களை விடவும் சிட்னியில் இங்கிலாந்து அணி நன்கு விளையாடி ஏராளமான வெற்றிகளைப் பெற்றுள்ளது. சிட்னியில் விளையாடிய 56 டெஸ்டுகளில் 22-ல் இங்கிலாந்து வெற்றி பெற்றிருப்பதால் 4-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி இதுவரை விளையாடியதை விட சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் கடைசியாக 2011-ல் சிட்னியில் தான் இங்கிலாந்து வென்றது. எனவே ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்துக்கு ராசியான உள்ள சிட்னி மைதானம் அதன் புதிய அத்தியாயத்துக்கு உதவுமா என்பது அடுத்த சில நாள்களில் தெரிந்துவிடும். 

எங்கள் நாட்டுக்காக விளையாடுவதில் பெருமை கொள்கிறோம். எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த இன்னும் இரு ஆட்டங்கள் உள்ளன. அந்த ஆட்டங்களில் மிகச்சிறந்த முறையில் நாங்கள் விளையாட வேண்டும். ஆஷஸ் தொடரில் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணம் எங்கள் வீரர்களுக்கு உள்ளது என இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com