
30 வயது இலங்கை வீரர் பனுகா ராஜபட்ச ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அணிக்காக 5 ஒருநாள், 18 டி20 ஆட்டங்களில் பனுகா விளையாடியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் அவர் பங்கேற்றார்.
இந்நிலையில் ஓய்வு அறிவிப்பைத் தற்போது வெளியிட்டுள்ளார் பனுகா. இலங்கை கிரிக்கெட்டில் உடற்தகுதி குறித்து புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதால் இதன் காரணமாக பனுகா ஓய்வை அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. குடும்பச் சூழ்நிலை காரணமாக ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் அவர் தெரிவித்துள்ளார்.
பனுகா இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என பிரபல வீரர் மலிங்கா கூறியுள்ளார். நாட்டுக்காக சர்வதேச அளவில் விளையாடுவது சுலபமல்ல. வீரர்கள் ஏராளமான சவால்களை எதிர்கொள்ளவேண்டும். இலங்கை கிரிக்கெட்டுக்கு பனுகா இன்னும் நிறைய சேவை செய்யவேண்டும். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை பனுகா மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றார்.
Just as our World Cup ends today, the hard work continues tomorrow.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.