இங்கிலாந்து வீரர்களை இழிவுபடுத்திய சம்பவம்: பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்ட ஆஸி. ரசிகர்கள்

சிட்னி டெஸ்டில் இங்கிலாந்து வீரர்களை இழிவுபடுத்திப் பேசிய மூன்று ரசிகர்களைப் பாதுகாவலர்கள் மைதானத்திலிருந்து வெளியேற்றினார்கள்.
பேர்ஸ்டோ
பேர்ஸ்டோ

சிட்னி டெஸ்டில் இங்கிலாந்து வீரர்களை இழிவுபடுத்திப் பேசிய மூன்று ரசிகர்களைப் பாதுகாவலர்கள் மைதானத்திலிருந்து வெளியேற்றினார்கள்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டை வென்று 3-0 என்கிற முன்னிலையுடன் ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி. 4-வது சிட்னியில் நடைபெற்று வருகிறது.

நேற்றைய ஆட்டத்தில் தேநீர் இடைவேளையின்போது பேட்டிங் செய்துகொண்டிருந்த ஸ்டோக்ஸும் பேர்ஸ்டோவும் ஓய்வறைக்குத் திரும்பினார்கள் அப்போது மைதானத்தில் இருந்த மூன்று ஆஸி. ரசிகர்கள் இரு இங்கிலாந்து பேட்டர்களையும் இழிவுபடுத்தும் விதமாகப் பேசியிருக்கிறார்கள். இதற்குக் கோபத்துடன் பதிலடி கொடுத்துள்ளார் பேர்ஸ்டோ. இச்சம்பவத்தைக் கண்ட பாதுகாவலர்கள் உடனடியாக மூன்று ரசிகர்களையும் மைதானத்தை விட்டு வெளியேற்றினார்கள்.

இச்சம்பவம் பற்றி பேர்ஸ்டோ கூறியதாவது:

நான் சதமடித்து ஓய்வறைக்குத் திரும்பியபோது அந்த ரசிகர்கள் மைதானத்தில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்போது அவர்கள் இல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டின் அற்புதமான நாளை அவர்கள் காணத் தவறிவிட்டார்கள். வீரர்களிடம் அதுபோல நடந்துகொள்வது தேவையற்றது. எங்களுடைய வேலையைச் செய்யவே நாங்கள் வந்துள்ளோம். மக்களும் ஆட்டத்தை ரசிக்கவே வருகிறார்கள். சிலசமயம் சிலர் எல்லை மீறிவிடுகிறார்கள். உங்களுடைய உரிமையை நீங்கள் தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மக்கள் எல்லை மீறும்போது அதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com