ஆடுகளத்தில் மீண்டும் மோதும் இந்தியா, பாகிஸ்தான்?: ரமீஸ் ராஜா முயற்சி

ஆடுகளத்தில் மீண்டும் மோதும் இந்தியா, பாகிஸ்தான்?: ரமீஸ் ராஜா முயற்சி

இந்தியா, பாகிஸ்தான் உள்பட நான்கு நாடுகள் பங்கேற்கும் டி20 போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான் உள்பட நான்கு நாடுகள் பங்கேற்கும் டி20 போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் சூழல் காரணமாக 2012-13-க்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை. ஐசிசி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் போட்டிகளில் மட்டுமே இரு நாடுகளும் மோதுகின்றன. இந்த நிலையை மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா முயற்சி எடுத்து வருகிறார். 

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் 36-வது தலைவராக ரமீஸ் ராஜா கடந்த வருடம் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு வாரியத்தில் 2003-04-ல் தலைமை அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். 2004-ல் இந்தியா பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்ததற்கு ரமீஸ் ராஜா முக்கியப் பங்கு வகித்தார். 

இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என நான்கு நாடுகளும் பங்கேற்கும் டி20 போட்டியை நடத்த ரமீஸ் ராஜா திட்டமிட்டு இதுபற்றி ஐசிசி கூட்டத்தில் விவாதிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் போட்டியை ஒவ்வொரு வருடமும் நடத்துவதன் மூலம் இந்தியாவும் பாகிஸ்தானும் சர்வதேச ஆட்டங்களில் அடிக்கடி மோதும் நிலைமை உருவாகும், இதன் வழியாக அதிக வருமானமும் கிடைக்கும் என்பதால் இதற்கான ஏற்பாடுகளை ரமீஸ் ராஜா செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரமீஸ் ராஜாவின் கனவு பலிக்குமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com