ராகுல், அகர்வாலை இழந்தது இந்தியா: 2-ம் நாள் முடிவில் 70 ரன்கள் முன்னிலை

தென் ஆப்பிரிக்காவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்து 70 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
அகர்வால் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ரபாடா
அகர்வால் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ரபாடா


தென் ஆப்பிரிக்காவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்து 70 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3-வது மற்றும் தொடரின் கடைசி டெஸ்ட் ஆட்டம் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

13 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ககிசோ ரபாடா சிறப்பாகப் பந்துவீசி மயங்க் அகர்வால் (7) விக்கெட்டை கைப்பற்றினார். அடுத்த ஓவரிலேயே கே.எல். ராகுலும் 10 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.

இதன்பிறகு, சேத்தேஷ்வர் புஜாரா மற்றும் கேப்டன் விராட் கோலி தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை பாதுகாத்தனர்.

2-ம் நாள் ஆட்டம் முடியும் வரை இந்த இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டது.

ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்து 70 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

புஜாரா 31 பந்துகளில் 9 ரன்களுடனும், கோலி 39 பந்துகளில் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்க தரப்பில் ககிசோ ரபாடா 1 விக்கெட்டையும், மார்கோ ஜான்சென் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com