பும்ரா 5 விக்கெட்டுகள்: 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தென் ஆப்பிரிக்கா

இந்தியாவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்தியாவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3-வது மற்றும் தொடரின் கடைசி டெஸ்ட் ஆட்டம் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 2-ம் நாள் தேநீர் இடைவேளையில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்திருந்தது. கீகன் பீட்டர்சென் அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இடைவேளைக்குப் பிறகு இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். பீட்டர்செனை மேற்கொண்டு ரன் சேர்க்கவிடாமல் 72 ரன்களுக்கு ஜாஸ்பிரித் பும்ரா ஆட்டமிழக்கச் செய்தார்.

இதன்பிறகு, இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ரன்னை நெருங்க ககிசோ ரபாடா முயற்சித்தார். அணியின் ஸ்கோரை 200 ரன்கள் வரை உயர்த்திய ரபாடா 15 ரன்களுக்கு ஷர்துல் தாக்குர் பந்தில் ஆட்டமிழந்தார். லுங்கி என்கிடியையும் பும்ராவே கடைசி விக்கெட்டாக வீழ்த்தினார்.

76.3 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இந்திய அணி 13 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணித் தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 5 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்குர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com