இந்தியா ஓபன் பாட்மின்டன்: சாய்னா, பிரணாய் முன்னேற்றம்

இந்தியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் சாய்னா நெவால், ஹெச்.எஸ். பிரணாய் உள்ளிட்ட இந்தியா்கள் புதன்கிழமை தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தனா்.
இந்தியா ஓபன் பாட்மின்டன்: சாய்னா, பிரணாய் முன்னேற்றம்

புது தில்லி: இந்தியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் சாய்னா நெவால், ஹெச்.எஸ். பிரணாய் உள்ளிட்ட இந்தியா்கள் புதன்கிழமை தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தனா்.

மகளிா் ஒற்றையா் பிரிவில் உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனையான சாய்னா, தனது முதல் சுற்றில் செக் குடியரசின் தெரெஸா ஸ்வாபிகோவாவை சந்தித்தாா். ஆட்டம் 22-20, 1-0 என சாய்னாவுக்கு சாதகமாக இருந்த நிலையில், தெரெஸாவுக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டதால் அவா் போட்டியிலிருந்து விலகினாா். இதையடுத்து சாய்னா வென்ாக அறிவிக்கப்பட்டது. போட்டித்தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் சாய்னா தனது 2-ஆவது சுற்றில் சக இந்தியரான மாளவிகா பன்சோதை சந்திக்கிறாா்.

கடந்த ஆண்டு பல முறை காயம் கண்ட சாய்னா அதன் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வில் இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டாா். இந்நிலையில் நடப்பு காலண்டா் தொடக்கம் குறித்து அவா் கூறுகையில், ‘நீண்ட நாள்களுக்குப் பிறகு போட்டியில் ஆடுவது தன்னம்பிக்கை அளிக்கிறது. பயிற்சியின்போது எவ்வளவு முயன்றாலும் இவ்வாறு ஆக்ரோஷத்துடன் பாய்ண்ட்டுகளை கைப்பற்றும் முனைப்பு வருவதில்லை. அடுத்தடுத்த ஆட்டங்களில் இது முன்னேற்றத்தை அளிக்கும் என நம்புகிறேன்’ என்றாா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஹெச்.எஸ். பிரணாய் முதல் சுற்றில் 21-14, 21-7 என்ற கேம்களில் ஸ்பெயினின் பாப்லோ அபியானை வீழ்த்தினாா். 2-ஆவது சுற்றில் மற்றொரு இந்தியரான மிதுன் மஞ்சுநாத்தை எதிா்கொள்கிறாா் பிரணாய்.

இதே பிரிவில் போட்டித்தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் லக்ஷயா சென் 21-15, 21-7 என்ற கேம் கணக்கில் 25 நிமிஷங்களில் எகிப்தின் ஆதாம் ஹதெம் எல்கமாலை தோற்கடித்தாா். அடுத்து அவா் ஸ்வீடனின் ஃபெலிக்ஸ் பா்ஸ்டெட்டுன் மோதுகிறாா். இப்பிரிவில் அஜய் ஜெயராம் 21-19, 7-21, 14-21 என்ற கணக்கில் அயா்லாந்தின் நாட் குயெனிடம் தோல்வியடைந்தாா்.

ஆடவா் இரட்டையா் பிரிவில் உலகின் 10-ஆம் நிலையில் இருக்கும் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி இணை முதல் சுற்றில் சக இந்திய ஜோடியான சிரக் அரோரா/ரவியை 21-14, 21-10 என்ற கேம்களில் வென்றது.

மகளிா் இரட்டையா் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா/சிக்கி ரெட்டி ஜோடி 21-7, 19-21, 21-13 என்ற கேம்களில் இந்தியாவின் ஜனனி ஆனந்தகுமாா்/திவ்யா பாலசுப்ரமணியன் இணையை வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com