இந்திய யு-19 கேப்டன், துணை கேப்டன் உள்பட ஆறு வீரர்களுக்கு கரோனா பாதிப்பு

உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள இந்திய யு-19 அணி கேப்டன் யாஷ் துல் உள்பட ஆறு வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்க
இந்திய யு-19 கேப்டன், துணை கேப்டன் உள்பட ஆறு வீரர்களுக்கு கரோனா பாதிப்பு

உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள இந்திய யு-19 அணி கேப்டன் யாஷ் துல் உள்பட ஆறு வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மேற்கிந்தியத் தீவுகளில் ஜனவரி 14 முதல் பிப்ரவரி 5-ம் தேதி வரை 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பைப் (யு-19 உலகக் கோப்பை) போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் கேப்டனாக தில்லி வீரா் யாஷ் துல், ஆந்திரத்தின் எஸ்.கே. ரஷீத் துணை கேப்டனாக செயல்படுகிறார்கள். தமிழக முன்னாள் வீரர் எஸ். ஷரத் தலைமையிலான தேர்வுக்குழு இந்திய அணியைத் தேர்வு செய்துள்ளது. 

இந்நிலையில் அயர்லாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டம் தொடங்கும் முன்பு இந்திய கேப்டன் யாஷ் துல் உள்பட ஆறு வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. யாஷ் துல், ஆராத்யா, ரஷீத் ஆகியோர் ரேபிட் பரிசோதனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. சித்தார்த் மேற்கொண்ட ஆர்டி - பிசிஆர் பரிசோதனையில் கரோனா இருப்பது கண்டறியப்பட்டது. பராக், வட்ஸ் ஆகியோருக்கு கரோனா அறிகுறிகள் உள்ளன. எனினும் ரேபிட் பரிசோதனையில் கரோனா இல்லை எனத் தெரிய வந்தது. அவர்களுடைய ஆர்டி - பிசிஆர் பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம். வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்படுவார்கள் என பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து ஆறு பேரும் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை. நிஷாந்த் சிந்து கேப்டனாகச் செயல்பட்டார். ஆறு பேர் தனிமைப்பட்டதால் 11 பேர் மட்டுமே விளையாடுவதற்குத் தயாராக இருந்தார்கள். அந்த ஆட்டத்தை இந்திய அணி, 174 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தை வென்ற இந்திய அணி, சனிக்கிழமையன்று நடைபெறும் மூன்றாவது ஆட்டத்தில் உகாண்டாவை எதிர்கொள்கிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com