மறக்க முடியாத சதத்தால் ரிஷப் பந்த் நிகழ்த்திய சாதனைகள்

எக்பாஸ்டன் மைதானத்தில் எடுக்கப்பட்ட விரைவான சதம் இதுதான்...
மறக்க முடியாத சதத்தால் ரிஷப் பந்த் நிகழ்த்திய சாதனைகள்
Published on
Updated on
3 min read

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்தபோது அதிரடியாக விளையாடி சதமெடுத்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டுக் கொடுத்தார் ரிஷப் பந்த். 

89 பந்துகளில் சதமடித்தார். அதன்பிறகும் நன்கு விளையாடி 111 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் 146 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ரிஷப் பந்த்.

அற்புதமான சதத்தினால் ரிஷப் பந்த் நிகழ்த்தியுள்ள சாதனைகள்: 

* இங்கிலாந்தில் இரு சதங்கள் எடுத்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த்

* 2018 முதல் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்தில் ரிஷப் பந்த் அடித்த சதங்கள்

114(146) - இங்கிலாந்து ஓவல்
159*(189) - ஆஸ்திரேலியா சிட்னி 
100*(139) - தெ.ஆ. நியூலாண்ட்ஸ்
146(111) - இங்கிலாந்து எக்பாஸ்டன் 

* ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்தில் விளையாடிய 19 டெஸ்டுகளில் 4 சதங்கள் எடுத்துள்ளார் ரிஷப் பந்த். 

ஆஸ்திரேலியாவில் - 1 சதம், 2 அரை சதங்கள்
இங்கிலாந்தில் - 2 சதங்கள், 1 அரை சதம்
தென்னாப்பிரிக்காவில் - 1 சதம் 

* டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்டுகளில் ரிஷப் பந்த் எடுத்த அதிக ரன்கள்

114(146) - இங்கிலாந்து 2018
159*(189) - ஆஸ்திரேலியா 2019
89*(138) - ஆஸ்திரேலியா 2021
101(118) - இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிராக 2021
100*(139) - தென்னாப்பிரிக்கா 2022
50(31) - இந்தியாவில் இலங்கைக்கு எதிராக 2022
146(111) இங்கிலாந்து 2022 

* இங்கிலாந்து எக்பாஸ்டன் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகிய மூன்று இந்தியர்கள் மட்டுமே சதமடித்துள்ளார்கள்.

* டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்கள் எடுத்த இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த். இதுவரை விளையாடிய டெஸ்டுகளில் 31 டெஸ்டுகளில் 8 டெஸ்டுகள் மட்டுமே இந்தியாவில் விளையாடியவை.  

* எக்பாஸ்டன் மைதானத்தில் 89 பந்துகளில் சதமடித்துள்ளார் ரிஷப் பந்த். இந்த மைதானத்தில் எடுக்கப்பட்ட விரைவான சதம் இதுதான். பிர்மிங்கம் 1902 முதல் டெஸ்ட் ஆட்டங்களை நடத்தி வருகிறது. இந்த மைதானத்தில் இதற்கு முன்பு சதமடித்த வேறு யாரும் 100 பந்துகளுக்குக் குறைவாக எதிர்கொண்டு சதமடித்ததில்லை. 

* இந்த வருடம் டெஸ்டில் அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரர் - ரிஷப் பந்த்

ரிஷப் பந்த் - 95.00 
பேர்ஸ்டோ - 75.95
ஸ்டோக்ஸ் - 68.45
ரூட் - 59.46
லதம் - 57.30

* ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆரம்பித்த பிறகு அதிக 50+ ஸ்கோர்கள் எடுத்த விக்கெட் கீப்பர்கள்

14 - ரிஷப் பந்த்
12 - டி காக் 
12 - நிரோஷன் டிக்வெல்லா 
11 - லிடன் தாஸ் 
 9 - ரிஸ்வான் 

* டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்களை எடுத்துள்ளார் ரிஷப் பந்த்.

டெஸ்டில் அவருடைய அறிமுகத்துக்குப் பிறகு 9 வீரர்கள் 2000 ரன்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளார்கள். ஆனால் 70 + ஸ்டிரைக் ரேட், 40 + சராசரி கொண்ட ஒரே வீரர் ரிஷப் பந்த் மட்டுமே.

* டெஸ்டில் 5-ம் நிலை பேட்டராக 7 இன்னிங்ஸில் 525 ரன்கள் எடுத்துள்ளார் ரிஷப் பந்த். சராசரி - 87.5. ஒரு சதம், 4 அரை சதங்கள். ஸ்டிரைக் ரேட் - 98.68. 

* வெளிநாடுகளில் டெஸ்டில் 5-வது நிலை பேட்டராக விளையாடிய 3 இன்னிங்ஸில் ரிஷப் பந்த் எடுத்த ரன்கள்:

சிட்னியில் 97, பிரிஸ்பேனில் 89*, பிர்மிங்கமில் 146 ரன்கள்.

3 இன்னிங்ஸ், 332 ரன்கள், சராசரி - 166, ஸ்டிரைக் ரேட் - 90.

* சேனா நாடுகளில் (தெ.ஆ., இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) அதிக சதங்கள் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர்கள்

ரிஷப் பந்த் - 4
மற்றவர்கள் - 0

* சேனா நாடுகளில் அதிக சதங்கள் எடுத்த இரு ஆசிய விக்கெட் கீப்பர்கள்

ரிஷப் பந்த் - 4
மொயின் கான் - 2

* டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர்கள்

தோனி - 6
ரிஷப் பந்த் - 5
சஹா - 3

* டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 மற்றும் 91 ரன்களுக்குள் ரிஷப் பந்த் ஆட்டமிழந்ததேயில்லை! அரை சதத்தைத் தாண்டிவிட்டால் 91 ரன்கள் வரை ஆட்டமிழக்காமல் விளையாடியுள்ளார். 

* 5 டெஸ்ட் சதங்களில் 4 சதங்களை ஆசியாவுக்கு வெளியே எடுத்துள்ளார் ரிஷப் பந்த். (இந்தியாவில் ஆமதாபாத்தில் ஒரு சதம் எடுத்தார்.) 25 வயதுக்கு முன்பு சச்சின், கவாஸ்கர், ரிஷப் பந்த் ஆகிய மூவர் மட்டுமே ஆசியாவுக்கு வெளியே அதிக சதங்களை அடித்த இந்திய பேட்டர்கள். சச்சின் 7 சதங்களும் கவாஸ்கர் 5 சதங்களும் எடுத்தார்கள். 

* இங்கிலாந்தில் விரைவாக சதமடித்த 2-வது இந்திய வீரர் ரிஷப் பந்த். 1990 லார்ட்சில் அசாருதீன் 87 பந்துகளில் சதமடித்தார். ரிஷப் பந்த் 89 பந்துகளில் சதமடித்தார். 

* டெஸ்டில் விரைவாக சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த். இதற்கு முன்பு தோனி, 2006-ல் ஃபைசலாபாத்தில் 93 பந்துகளில் சதமடித்தார். அது தோனியின் முதல் டெஸ்ட் சதம். 

* இங்கிலாந்துச் சுழற்பந்து விச்சாளர் ஜேக் லீச்சுக்கு எதிராக 91 பந்துகளில் 147 ரன்கள் எடுத்துள்ளார் ரிஷப் பந்த். ஸ்டிரைக் ரேட் - 161.53. ஒரு முறை மட்டுமே ஆட்டமிழந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com