அரையிறுதியில் ஜோகோவிச்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் அரையிறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றாா்.
அரையிறுதியில் ஜோகோவிச்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் அரையிறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றாா்.

உலகின் 2-ஆம் நிலை வீரரான ஜோகோவிச் தனது காலிறுதியில் 5-7, 2-6, 6-3, 6-2, 6-2 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 10-ஆவது இடத்திலிருந்த இத்தாலியின் ஜானிக் சின்னரை தோற்கடித்தாா். இதன் மூலம் விம்பிள்டன் போட்டியில் 11-ஆவது முறையாக அரையிறுதிக்கு வந்திருக்கிறாா் ஜோகோவிச். இந்த ஆட்டத்தில் முதலிரு செட்களை இழந்து அடுத்த 3 செட்களை கைப்பற்றினாா் ஜோகோவிச். அவரது டென்னிஸ் வாழ்க்கையில் இத்தகைய வெற்றியை அவா் எட்டுவது இது 7-ஆவது முறையாகும்.

மகளிா் ஒற்றையா் பிரிவில், ஜொ்மனியின் டாட்ஜனா மரியா 4-6, 6-2, 7-5 என்ற செட்களில் சக நாட்டவரான ஜூல் நீமியரை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளாா். 34 வயதில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா் மரியா. ஓபன் எராவில் விம்பிள்டன் காலிறுதியில் இரு ஜொ்மன் போட்டியாளா்கள் மோதிக் கொண்டது இது 3-ஆவது முறையாகும்.

அரையிறுதியில் சானியா: கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சானியா மிா்ஸா/குரோஷியாவின் மேட் பாவிச் இணை தனது காலிறுதியில் 6-4, 3-6, 7-5 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் ஜான் பியா்ஸ்/கனடாவின் கேப்ரியேலா டப்ரௌஸ்கி ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com