விம்பிள்டன் போட்டியிலிருந்து நடால் திடீரென விலகல்

உடல்நலக்குறைவு காரணமாக விம்பிள்டன் போட்டியிலிருந்து பிரபல வீரர் நடால் விலகியுள்ளார்.
விம்பிள்டன் போட்டியிலிருந்து நடால் திடீரென விலகல்

உடல்நலக்குறைவு காரணமாக விம்பிள்டன் போட்டியிலிருந்து பிரபல வீரர் நடால் விலகியுள்ளார்.

லண்டனில் நடைபெற்ற காலிறுதிச் சுற்றில் நடாலும் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸும் மோதினார்கள். 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற நடால் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் மிகவும் தடுமாறினார். வயிற்றுத் தசைப்பிடிப்பு, கால் வலி போன்ற சிக்கல்களால் அவரால் இயல்பாக விளையாட முடியாமல் போனது. 2-வது செட்டின்போது சிறிது நேரம் காயங்களுக்குச் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகே மீண்டும் விளையாட வந்தார். 2008 மற்றும் 2010-ல் விம்பிள்டனை வென்ற நடால், 4 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி 3-6, 7-5, 3-6, 7-5, 7-6 (10/4) என்ற செட் கணக்கில் ஃபிரிட்ஸை வீழ்த்தி மகத்தான வெற்றியை அடைந்தார். 

இன்று நடைபெறும் அரையிறுதியில் நிக் கிர்ஜியோஸை நடால் எதிர்கொள்வதாக இருந்தது. இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக அரையிறுதிச் சுற்றிலிருந்து விலகியுள்ளார் நடால். இதனால் நிக் கிர்ஜியோஸ் இறுதிச்சுற்றுக்கு முதல்முறையாக முன்னேறியுள்ளார்.

வயிற்றுப்பகுதியில் இன்னும் வலி உள்ளது. இந்த நிலையில் என்னால் இரண்டு ஆட்டங்களில் வென்று விம்பிள்டன் பட்டத்தை வெல்ல முடியும் எனத் தோன்றவில்லை. அதனால் இந்த முடிவை எடுத்தேன். என்னால் சரியான வேகத்தில் சர்வீஸ் செய்ய முடியாது. இயல்பாக நகரமுடியாது. போட்டி மனப்பான்மையுடன் விளையாட முடியாதபோது அரையிறுதிச் சுற்றில் பங்குபெற விருப்பமில்லை. இதனால் நிலைமை இன்னும் மோசமாகலாம். இன்னும் மூன்று, நான்கு வாரங்களில் சரியாகிவிடும் என நினைக்கிறேன். இன்னும் ஒரு வாரத்தில் சர்வீஸ் போடாமல் விளையாட முடியும் எனத் தன் முடிவுக்கு விளக்கம் அளித்துள்ளார் நடால். இந்த வருடம் நடைபெற்ற ஆஸ்திரேலிய, பிரெஞ்சு ஓபன் போட்டிகளை நடால் வென்றிருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com