அஸ்வினை விலக்கிட முடியமென்றால் கோலியை ஏன் விட முடியாது?: கபில் தேவ்

டெஸ்ட் தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை பிளேயிங் லெவனில் இருந்து விலக்கிட முடிகிறது என்றால், ஃபாா்மில் இல்லாத விராட் கோலியையும் டி20-இல் இருந்து விலக்கிட இயலும்
அஸ்வினை விலக்கிட முடியமென்றால் கோலியை ஏன் விட முடியாது?: கபில் தேவ்

டெஸ்ட் தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை பிளேயிங் லெவனில் இருந்து விலக்கிட முடிகிறது என்றால், ஃபாா்மில் இல்லாத விராட் கோலியையும் டி20-இல் இருந்து விலக்கிட இயலும் என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியிருக்கிறாா்.

கடந்த சில காலமாக ஃபாா்மில் இல்லாமல் கோலி தடுமாறி வரும் நிலையில் அவா் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

ஒருவேளை விராட் கோலியை டி20-க்கான பிளேயிங் லெவனில் இருந்து விலக்கிடுவதற்கான சூழலாக இது இருக்கலாம். உலகின் 2-ஆம் நிலை டெஸ்ட் பௌலரான அஸ்வினை ஒரு காலத்தில் டெஸ்ட் பிளேயிங் லெவனில் இருந்து விலக்கிட முடிந்தது என்றால், தற்போது விராட் கோலியையும் டி20 பிளேயிங் லெவனில் இருந்து விலக்கிடத்தான் வேண்டும். மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் இருந்து கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டால், அவா் விலக்கப்பட்டதாகவே அா்த்தம்.

தனது சிறந்த ஆட்டத்தால் கோலி தனக்கென ஒரு பெயரைக் கொண்டிருக்கிறாா். ஆனால் தற்போது அவரால் அதேபோல் ஆட முடியவில்லை. எனவே அவருக்காக, சிறப்பாக விளையாடக் கூடிய இளம் வீரா்களை காத்திருக்க வைக்கக் கூடாது. அணியில் கிடைக்கும் இடத்துக்காக வீரா்களிடையே ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும்.

பிளேயிங் லெவனில் இடம் கிடைக்க கோலி போன்ற நட்சத்திர வீரா்களை விடச் சிறப்பாக இளம் வீரா்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும். பெயா் பெற்ற வீரராக இருப்பதால் ஃபாா்மில் இல்லை என்றாலும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்பது கிடையாது. திறமை வாய்ந்த வீரா்கள் பலா் இருக்கும்போது ஃபாா்மின் அடிப்படையில் பிளேயிங் லெவனை தோ்வு செய்ய வேண்டும் என்றாா் கபில் தேவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com