ஐசிசி தரவரிசை: பும்ரா நெ.1

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பந்துவீச்சாளர்களில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார் இந்தியாவின் பும்ரா.
ஐசிசி தரவரிசை: பும்ரா நெ.1

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பந்துவீச்சாளர்களில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார் இந்தியாவின் பும்ரா.

இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. 5-வது டெஸ்டில் தோற்ற இந்திய அணி, டி20 தொடரை 2-1 என வென்றது. ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் ஆட்டத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் முதல் ஒருநாள் ஆட்டத்தை வென்றது இந்திய அணி. இங்கிலாந்து 25.2 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 7.2 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் எடுத்தார் பும்ரா.

இதையடுத்து இன்று வெளியிடப்பட்ட ஒருநாள் தரவரிசையில் பந்துவீச்சாளர்களில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார் பும்ரா. 5 இடங்கள் முன்னேறி முதலிடத்துக்கு வந்துள்ளார். 

அதேபோல டி20 தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ், 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 3-வது டி20 ஆட்டத்தில் அற்புதமான சதம் எடுத்ததால் இந்த நிலையை அடைந்துள்ளார். இந்திய வீரர்களில் இவர் தான் தரவரிசையில் முன்னிலையில் உள்ளார். கடந்த வருடம் இந்திய அணியில் இடம்பிடித்து 17 டி20 இன்னிங்ஸில் ஒரு சதமும் 4 அரை சதங்களும் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 177.22. டி20 பந்துவீச்சாளர்களில் இந்தியாவின் புவனேஸ்வர் குமார், 7-ம் இடத்தில் உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com