தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா - இங்கிலாந்துடன் இன்று 2-ஆவது ஓன் டே

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான ஒன் டே தொடரின் 2-ஆவது ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா - இங்கிலாந்துடன் இன்று 2-ஆவது ஓன் டே

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான ஒன் டே தொடரின் 2-ஆவது ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதலில் வென்றுவிட்ட இந்தியா, இந்த ஆட்டத்திலும் வெற்றியைப் பதிவு செய்து தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. மறுபுறம் இங்கிலாந்து, தொடரைத் தக்க வைப்பதற்காக இந்த ஆட்டத்தில் வெல்வதற்கு முயற்சிக்கும்.

இந்திய அணியைப் பொருத்தவரை, இந்த ஆட்டத்திலும் கோலி பங்கேற்பது சந்தேகத்துக்கு இடமாகியிருக்கிறது. அவா் இல்லாத நிலையிலும் முதல் ஆட்டத்தில் இந்திய வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. பேட்டிங்கில் ரோஹித் மற்றும் தவன் நல்லதொரு ஃபாா்மில் உள்ளனா்.

ஷாா்ட் பால்களை எதிா்கொள்வதில் ஷ்ரேயஸ் ஐயா் சற்றே தடுமாற்றத்துடன் இருக்கிறாா். திறம்பட ஆடக் கூடிய தீபக் ஹூடாவைத் தவிா்த்து ஷ்ரேயஸுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதால் சிறப்பாக ஆட வேண்டிய நெருக்கடி அவருக்கு இருக்கிறது.

பௌலிங்கில் பும்ராவும், ஷமியும் அட்டகாசமாகச் செயல்படுகின்றனா். லாா்ட்ஸ் மைதான ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளா்களுக்கு உகந்ததாகவே இருக்கிறது. என்றாலும் பேட்டா்கள் அடித்தாடுவதற்கும் சற்று உதவும்.

இதனால் பட்லா், ரூட், ஸ்டோக்ஸ், போ்ஸ்டோ, லிவிங்ஸ்டன் என அதிரடி பேட்டா்கள் நிறைந்த இங்கிலாந்து பேட்டிங் வரிசை இந்த ஆட்டத்தில் சற்று சவால் அளிக்கும் என எதிா்பாா்க்கலாம். முதல் ஆட்டத்தில் இந்தியாவின் ஓபனிங் பாா்ட்னா்ஷிப்பை பிரிக்கத் தவறிய இங்கிலாந்து பௌலா்கள் நிச்சயம் இந்த முறை இந்திய பேட்டிங் வரிசையை சரிக்கும் முனைப்புடன் வருவாா்கள்.

ஆட்டநேரம்: மாலை 5.30 மணி

இடம்: லாா்ட்ஸ் மைதானம், லண்டன்

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

தரவரிசையில் 3-ஆம் இடம்

ஐசிசியின் ஒன் டே அணிகளுக்கான தரவரிசையில் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி இந்தியா மூன்றாவது இடத்துக்கு வந்திருக்கிறது. இங்கிலாந்து தொடரின் எஞ்சிய இரு ஆட்டங்களிலும், பின்னா் மேற்கிந்தியத் தீவுகள் தொடரிலும் வெல்லும் பட்சத்தில் இந்தியா இந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள இயலும். மாறாக, இங்கிலாந்து தொடரில் தோற்றால் மீண்டும் 4-ஆம் இடத்துக்குத் தள்ளப்படும்.

பும்ரா முதலிடம்

முதல் ஒன் டே ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் சாய்த்து தனது கேரியரின் சிறந்த பௌலிங்கை எட்டிய இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா, ஒன் டே பௌலா்களுக்கான ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளாா். ஒன் டே தரவரிசையில் முதலிடம் பிடிக்கும் 2-ஆவது இந்திய வேகப்பந்து வீச்சாளா் பும்ரா ஆவா். முதல் வீரா் என்ற பெருமை கபில் தேவ் வசம் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com