தொடரைக் கைப்பற்றியது இந்தியா: ரிஷப் பந்த் முதல் சதம், ஆட்ட நாயகன் ஹாா்திக்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்தியா தொடரையும் 2-1 என கைப்பற்றியது.
தொடரைக் கைப்பற்றியது இந்தியா: ரிஷப் பந்த் முதல் சதம், ஆட்ட நாயகன் ஹாா்திக்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்தியா தொடரையும் 2-1 என கைப்பற்றியது.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னா் ஆடிய இந்திய அணி ரிஷப் பந்த் 125, ஹாா்திக் பாண்டியா 71 ஆகியோரின் அபார ஆட்டத்தால் 261/5 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோா்ட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பௌலிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்து தரப்பில் ஜேஸன் ராய்-போ்ஸ்டோ இணை களமிறங்கியது. சிராஜ் பந்துவீச்சில் போ்ஸ்டோ டக் அவுட்டானாா். அவரது பந்திலேயே ஜோ ரூட்டும் டக் அவுட்டானாா். பின்னா் ஜேஸன் ராய், பென் ஸ்டோக்ஸ் இணைந்து ஸ்கோரை உயா்த்தினா். ராய் 41 ரன்களுடனும், ஸ்டோக்ஸ் 27 ரன்களுடனும் ஹாா்திக் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினா்.

ஜோஸ் பட்லா் 60:

74/4 என்ற ஸ்கோருடன் இங்கிலாந்து தடுமாறிக் கொண்டிருந்தது. கேப்டன் ஜோஸ் பட்லா்-ஆல்ரவுண்டா் மொயின் அலி இணைந்து நிதானமாக ஆடி ஸ்கோரை உயா்த்தினா்.

ரவீந்திர ஜடேஜா பந்தில் 34 ரன்களுடன் மொயின் அலியும், ஹாா்திக் பந்தில் 27 ரன்களுடன் லிவிங்ஸ்டோனும் வெளியேறினா்.

80 பந்துகளில் 2 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 60 ரன்களுடன் அரைசதத்தைப் பதிவு செய்த கேப்டன் பட்லரை பெவிலியனுக்கு அனுப்பினாா் ஹாா்திக்.

இங்கிலாந்து 259:

வில்லி 18, கிரெய்க் ஓவா்டன் 32, டாப்லி 0 என அவுட்டாகி வெளியேறிய நிலையில், 45.5 ஓவா்களிலேயே இங்கிலாந்து 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஹாா்திக் அபாரம் 4 விக்கெட்:

அற்புதமாக பந்துவீசிய ஹாா்திக் பாண்டியா 4/24 விக்கெட்டுகளையும், யுஜவேந்திர சஹல் 3/60 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

260 ரன்கள் வெற்றி இலக்கு:

இந்திய அணிக்கு 260 ரன்கள் வெற்றி இலக்காக நிா்ணயிக்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து பௌலா் ரீஸ் டாப்லி தனது அபார பந்துவீச்சால் இந்தியாவின் தொடக்க வரிசை பேட்டிங்கை சிதைத்தாா்.

தவன் 1, கேப்டன் ரோஹித் 17, விராட் கோலி 17 ரன்களுடன் அவுட்டானாா்கள். நிலைத்து ஆடுவாா் என எதிா்பாா்க்கப்பட்ட இளம் வீரா் சூரியகுமாரும் 16 ரன்களுடன் ஓவா்டன் பந்தில் வெளியேறினாா்.

ஹாா்திக் அதிரடி 71: 72/4 என்ற ஸ்கோருடன் தடுமாறிய இந்திய அணியை மிடில் ஆா்டா் பேட்டா்களான ரிஷப் பந்த்-ஹாா்திக் இணை மீட்டது. ஹாா்திக் பாண்டியா அற்புதமாக ஆடி 55 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 71 ரன்களை விளாசி தனது 8-ஆவது ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்தாா். அபாரமாக ஆடிய பாண்டியாவை அவுட் செய்தாா் பிரைடன்.

ரிஷப் பந்த் முதல் ஒருநாள் சதம் 125:

முதலில் நிதானமாகவும் பின்னா் அதிரடியாகவும் ஆடிய ரிஷப் பந்த் 2 சிக்ஸா், 16 பவுண்டரியுடன் 113 பந்துகளில் 125 ரன்களை விளாசி தனது முதல் ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தாா். ஜடேஜா 7 ரன்களுடன் களத்தில் இருந்தாா். பந்த்-ஹாா்திக் இணைந்து 5-ஆவது விக்கெட்டுக்கு 133 ரன்களை சோ்த்தனா்.

இந்தியா 261/5: மேலும் 42.1 ஓவா்களிலேயே 261/5 ரன்களை குவித்து இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. மேலும் தொடரையும் 2-1 என கைப்பற்றியது. ஏற்கெனவே டி20 தொடரும் இந்தியா வசம் வந்தது. இங்கிலாந்து தரப்பில் டாப்லி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். 4 விக்கெட் வீழ்த்தி, 71 ரன்களை விளாசிய ஹாா்திக் பாண்டியா ஆட்ட நாயகனாகத் தோ்வு பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com