உலகத் தடகள சாம்பியன்ஷிப்: நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்றுக்குத் தகுதி

மற்றொரு இந்தியரான ரோஹித் யாதவும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். 
உலகத் தடகள சாம்பியன்ஷிப்: நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்றுக்குத் தகுதி

அமெரிக்காவில் நடைபெறும் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா (23) தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தாா். இறுதிச்சுற்றில் அவா் 87.58 மீ. தூரம் எறிந்து முதலிடம் பிடித்தாா். ஆகஸ்ட் 7 அன்று ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா. இதையொட்டி ஆகஸ்ட் 7-ம் தேதியை தேசிய ஈட்டி எறிதல் நாளாக தேதி கொண்டாடப்படும் என இந்தியத் தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது. ஃபின்லாந்தில் நடைபெற்ற பாவோ நுர்மி போட்டியில் 89.30 மீ. தூரம் எறிந்து 2-ம் இடம் பிடித்ததோடு புதிய தேசிய சாதனையையும் படைத்தார் நீரஜ் சோப்ரா.  இதையடுத்து தற்போது நடைபெற்று வரும் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இன்று நடைபெற்ற தகுதிச்சுற்றில் முதல் வாய்ப்பிலேயே 88.39 மீ. தூரத்துக்கு ஈட்டியை எறிந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா. தகுதிச்சுற்றில் அதிகத் தூரம் ஈட்டியை எறிந்தவர்களில் நீரஜ் சோப்ரா 2-ம் இடம் பிடித்தார். ஆண்டர்சன் பீட்டர்ஸ் 89.91 மீ. தூரத்துக்கு ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்தார். தகுதிச்சுற்றில் 80.42 மீ. தூரத்துக்கு ஈட்டியை எறிந்த மற்றொரு இந்தியரான ரோஹித் யாதவும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்று வரும் ஞாயிறன்று காலை 7.05 மணிக்குத் தொடங்கவுள்ளது. இப்போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ராவும் ரோஹித் யாதவும் பங்கேற்கிறார்கள்.

2022 உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆறு இந்தியர்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்கள். 

ரோஹித் யாதவ்
ரோஹித் யாதவ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com