இந்தியா - மே.இ. தீவுகள் தொடர்: எந்த ஓடிடி, தொலைக்காட்சியில் பார்க்க முடியும்? முழு விவரங்கள்!

ஓடிடி தளத்தில் பார்க்கக் கட்டணம் எவ்வளவு?
இந்தியா - மே.இ. தீவுகள் தொடர்: எந்த ஓடிடி, தொலைக்காட்சியில் பார்க்க முடியும்? முழு விவரங்கள்!

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கு அடுத்ததாக இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் ஜூலை 22 அன்றும் டி20 தொடர் ஜூலை 29 அன்றும் தொடங்குகின்றன. 

ஒருநாள் தொடரில் ஷிகர் தவன் தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. ரோஹித் சர்மா, கோலி, பாண்டியா, பும்ரா, பந்த், ஷமி ஆகியோர் ஓய்வு காரணமாக ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. காயம் காரணமாக கே.எல். ராகுலும் அணியில் இல்லை. ஷுப்மன் கில், சஞ்சு சாம்சன், ருதுராஜ், தீபக் ஹூடா, அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான் ஆகியோர் அணியில் உள்ளார்கள்.

ஒருநாள் தொடரின் ஆட்டங்கள் இந்திய நேரம் இரவு 7 மணிக்கும் டி20 தொடரின் ஆட்டங்கள் இந்திய நேரம் 8 மணிக்கும் தொடங்குகின்றன. 

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் தொடர்களின் உரிமையை 2024 வரை ஃபேன்கோட் ஓடிடி தளம் பெற்றிருப்பதால் இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள், டி20 தொடர்களும் ஃபேன்கோட் ஓடிடியில் ஒளிபரப்பாகின்றன. தொலைக்காட்சி உரிமை எந்தவொரு தனியார் நிறுவனங்களும் அளிக்கப்படவில்லை. பதிலாக, தொலைக்காட்சி ஒளிபரப்பு டிடி ஸ்போர்ட்ஸுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள், டி20 தொடர்களை தொலைக்காட்சியில் பார்க்க விருப்பப்படுபவர்கள், டிடி ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்க்கலாம். கடந்த 15 வருடங்களில் முதல்முறையாக இந்திய அணி விளையாடும் வெளிநாட்டு கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பும் நேரடி உரிமை டிடி ஸ்போர்ட்ஸுக்குக் கிடைத்துள்ளது. 

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள், டி20 தொடர்களை ஃபேன்கோட் ஓடிடி தளத்தில் பார்க்கக் கட்டணம் எவ்வளவு?

ரூ. 99 செலுத்தினால் இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள், டி20 தொடர்களைஃபேன்கோட் ஓடிடி தளத்தில் பார்க்க முடியும். டிவியோ செல்போனோ லேப்டாப்போ ஒரு சாதனத்தில் மட்டுமே பார்க்க முடியும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com