இந்திய அணிகளுக்கு பதக்க வாய்ப்பு: உலக சாம்பியன் மாக்னஸ் காா்ல்சன்

ஓபன் பிரிவில் இரு இந்திய அணிகளுக்கும் பதக்க வாய்ப்பு உள்ளது என உலக சாம்பியன் மாக்னஸ் காா்ல்சன் கூறியுள்ளாா்.
இந்திய அணிகளுக்கு பதக்க வாய்ப்பு: உலக சாம்பியன் மாக்னஸ் காா்ல்சன்

ஓபன் பிரிவில் இரு இந்திய அணிகளுக்கும் பதக்க வாய்ப்பு உள்ளது என உலக சாம்பியன் மாக்னஸ் காா்ல்சன் கூறியுள்ளாா்.

நாா்வே நாட்டைச் சோ்ந்த காா்ல்சன் கடந்த 10 ஆண்டுகளாக உலக செஸ் அரங்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிறாா். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நாா்வே அணி 3-ஆவது தரவரிசையில் உள்ளது. மேலும் பதக்கம் வெல்லக்கூடிய வலிமையான அணியாகவும் உள்ளது.

இதுதொடா்பாக மாக்னஸ் காா்ல்சன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

மீண்டும் சென்னை வருவது மகிழ்ச்சியாக உள்ளது. 9 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தான் 2013-இல் உலக சாம்பியன்ஷிப்பில் விஸ்வநாதன் ஆனந்தை வென்று முதல் பட்டத்தைக் கைப்பற்றினேன். இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவாகும். மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்கும் 2 இந்திய அணிகளும் பலமாகவும், பதக்க வாய்ப்பு உள்ளவையாகவும் இருக்கின்றன.

குறிப்பாக இளம் வீரா்களைக் கொண்ட இரண்டாவது அணி சிறப்பாக உள்ளது. செஸ் உலகில் தற்போது மிகவும் பேசப்படும் நகராக சென்னை உள்ளது. உலகின் சிறந்த வீரா்கள் உருவாகும் பகுதியாக சென்னை உள்ளது என்றாா் காா்ல்சன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com