ஒலிம்பியாட்: பிரக்ஞானந்தா விளையாடும் ஆட்டத்தைக் காண்பது எப்படி?

பிரக்ஞானந்தாவின் ஆட்டத்தை இங்கே நேரலையாகக் காணலாம்.
ஒலிம்பியாட்: பிரக்ஞானந்தா விளையாடும் ஆட்டத்தைக் காண்பது எப்படி?

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழகத்தின் செஸ் நட்சத்திரம் பிரக்ஞானந்தா இன்று களமிறங்கியுள்ளார். 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.

முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய 6 ஆட்டங்களிலும் 4-0 என முழுமையாக வெற்றி பெற்றது. 

இன்று 2-வது சுற்று தொடங்கியுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் 16 வயது தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்திய பி அணி எஸ்டோனியாவுக்கு எதிராக விளையாடுகிறது. இந்திய பி அணியில் உள்ள தமிழக வீரர்களான பிரக்ஞானந்தா, குகேஷ், அதிபன் மற்றும் ருனாக் சாத்வனி ஆகியோர் விளையாடுகிறார்கள். பிரக்ஞானந்தாவுடன் எஸ்டோனியா வீரர் கிரில் சுகாவின் மோதுகிறார். தமிழக ரசிகர்கள் பிரக்ஞானந்தாவின் வெற்றியை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். 

பிரக்ஞானந்தாவின் ஆட்டத்தை இந்த லிங்க்கில் சென்று நேரலையாகக் காணலாம். Praggnanandhaa என இந்தப் பக்கத்தில் தேடினால் அவர் விளையாடும் ஆட்டத்தைக் காண முடியும். சர்வதேச செஸ் சம்மேளனத்தின் யூடியூப் பக்கத்திலும் 2-ம் சுற்று ஆட்டங்களைக் காணலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com