திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

செஸ் ஒலிம்பியாட்: தமிழில் ட்வீட் செய்த இந்திய வீராங்கனை

சென்னை ஒலிம்பியாட் போட்டியில் இந்திய சி அணியில் இடம்பெற்றுள்ளார்.  

News image
Updated On :30 ஜூலை 2022, 11:58 am IST

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.

முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய 6 ஆட்டங்களிலும் 4-0 என முழுமையாக வெற்றி பெற்றது. 

தமிழ்நாட்டின் சேலம் பகுதியைச் சேர்ந்த 26 வயது செஸ் வீராங்கனை நந்திதா பி.வி., 2020-ல் மகளிர் கிராண்ட்மாஸ்டராக ஆனார். பிரபல பயிற்சியாளர் ஆர்பி ரமேஷிடம் பயிற்சி பெற்றவர். சென்னை ஒலிம்பியாட் போட்டியில் இந்திய சி அணியில் இடம்பெற்றுள்ளார்.  

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கியதை முன்னிட்டு தன்னுடைய ட்விட்டர் பகுதியில், முதல் நாள் ஒலிம்பியாட் இனிதே துவங்கியது என்று தமிழில் ட்வீட் வெளியிட்டார்.  மேலும் ட்விட்டரில் தன்னுடைய அறிமுகத்தில் தமிழ் பெண் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.