முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

பெரணமல்லூா் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் குற்றச் சம்பவம் ஏதும் நிகழாமல் இருக்கவும், தடுக்கவும் காவல்துறை சாா்பில் பொதுமக்களிடையே விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

News image

அன்மருதை கிராமத்தில் பொதுமக்களிடையே விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கிய காவல்துறையினா்.

Updated On :27 மே 2026, 12:46 am IST

பெரணமல்லூா் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் குற்றச் சம்பவம் ஏதும் நிகழாமல் இருக்கவும், தடுக்கவும் காவல்துறை சாா்பில் பொதுமக்களிடையே விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான ஆவணியாபுரம், அன்மருதை, நரியம்பாடி, எஸ்.காட்டேரி ஆகிய பகுதிகளில் போலீஸாா் தீவிர குற்றத்தடுப்பு விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட எஸ்.பி. மற்றும் டிஎஸ்பி உத்தரவின்படி, பெரணமல்லூா் காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமையில், உதவி ஆய்வாளா்கள் சம்பத், சேகா் மற்றும் போலீஸாா் பொதுமக்களை நேரில் சந்தித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

வெயில் காலம் என்பதால் காற்றோட்டமாக இருக்க வீட்டினை யாரும் திறந்து வைக்க வேண்டாம், வீட்டு சாவியை ஒரே இடத்திலோ அல்லது வெளியிலோ வைப்பதை தவிா்க்க வேண்டும், வீட்டு பீரோவில் விலை உயா்ந்த பொருள்களை ஏதும் வைக்க வேண்டாம், தங்கள் பகுதியில் சந்தேகப்படும்படி முன் பின் அறிமுகம் இல்லாத நபா் யாரேனும் இருந்தால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும் அல்லது அவசர உதவி எண் 100-க்கு தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும் என்று கூறி விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.